பி. இ. நூ. நன். 364 காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை இ. வி. 338 வினையின் தொகுதி காலத் தியலும் முத்து. ஒ. 96. காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை இளம் உரை : வினைச் சொல் தொகுங்கால் காலந்தோன்றத் தொகும், எ-று. காலத்தியலும் என்றது எக்காலும் காலமுடையவாய் இயலும் என்றவாறு. வ-று : கொல்யானை என்பது கொன்றயானை; கொல்யானை-கொல்லா நின்றயானை; கொல்யானை-கொல்லும்யானை என மூன்று காலத்திற்கும் அதுவே வாய்பாடு. பிறிதில்லை. மற்றுக் 1கொல்யானை என்றானேல் நிகழ் காலமும் அறியலாம்; கொல்லிய ஓடுவதனைக் கண்டு ‘கொல்யானை’ என்றானேல் எதிர் காலம் என்பது அறியலாம். பிறவு மன்ன. சேனா இ-ள் : வினைத் தொகை காலத்தின்கண் நிகழும், எ-று.
1. கொல்லும்யானையைக்கண்டு கொல்யானை என்றானேல் இத்தொடர்க்கு முன்னர் “கொன்று ஓடும் யானையைக்கண்டு கொல்யானை என்றானேல் இறந்தகாலம் என்பது அறியலாம்” என்னும் தொடர் இருந்திருத்தல் வேண்டும்-சிவ. |