‘செந்தமிழ் நிலமாவன வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும்’ என்பர் இளம்பூரணர் முதலியோர். இவ்வாறு கொள்ளுதற்குத் தக்க ஆதாரம் இல்லாமையானும், வையையாற்றின் தெற்காகிய மதுரையும் கருவூரின் மேற்காகிய வஞ்சியும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் அன்னோர் கருத்துப்படித் தமிழ்திரி நிலமாதல் வேண்டும் ஆதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. “வடவேங்கடம் தென்குமரி, ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகம்” எனவரும் சிறப்புப் பாயிரத்துள் வேங்கடத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முழுவதையும் ‘தமிழ்கூறும் நல்லுலகம்’ எனப்பனம்பாரனார் கூறுதலானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது வடக்கின் வேங்கடமும் தெற்கின் குமரியும் எல்லை கூறியதனால் வேங்கடத்தின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்கும் ஆகிய நான்கு பேரெல்லைக்குட்பட்ட தமிழகம் முழுவதையுமே செந்தமிழ் நிலமெனத் தொல்காப்பியர் காலத் தமி்ழ் மக்கள் வழங்கினர் எனக்கொள்ளுதலே பொருத்தமுடையதாம் என்பது தெய்வச் சிலையார் உரையாற்புலனாம். ஆதித்தர் பொருள் மாறாட்டத்துக்கு இடமின்றி யாவரும் உணரத்தக்க முறையில் பயிலப்பெறும் சொல் எல்லாம் இயற்சொல். திரிசொல் இலக்கணம். 393. | ஒருபொருட் குறித்த வேறுசொல் லாகியும் | | வேறுபொருட் குறித்த வொருசொல் லாகியு | | மிருபாற் றென்ப திரிசொற் கிளவி. | | | | (ஒருபொருள் குறித்த வேறுசொல் ஆகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் ஆகியும இருபாற்று என்ப திரிசொல் கிளவி). |
ஆ. மொ. இல. The ‘Thiricol’- words are of two kinds Which are synonyms and homonyms. |