பி. இ. நூ நன். 272 ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த ஒருசொல் லாகியும் அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்.. இ. வி. 173. ஒரு பொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி. தொ. வி. 44 திரிசொல் ஒருபொருள் தெரிபல சொல்லும் பலபொருட் கொருசொலும் பயன்படற் குரியன. முத்து. ஓ. 50 ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த ஒருசொல் லாகியும் எனஇரு பாற்றே திரிசொற் கிளவி. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், முறையானே திரிசொல் இவையென்று இலக்கணத்தாற் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை : ஒரு பொருளைக் கருதிப் பல சொல்லான் வருதலும் பல பொருளைக் கருதி ஒரு சொல்லான் வருதலும் என இரு கூற்றனவாகும் திரிசொற்கள், எ-று. ஒரு பொருளைக் குறித்த வேறு சொல்லாகி வருவன : 1அடுக்கல், பிறங்கல், விண்டு, ஓங்கல் என இவை வேறு பொருள் குறித்த ஒருசொல் உந்தி என்பது. ஆற்றிடைக் குறையும், கொப்பூழும், தேர்த்தட்டும், யாழகந்ததோர் உறுப்பும் (மனஞெழிலும்) என இவையெல்லாம் விளங்கி நிற்கும்.
1. இவையாவும் மலை என்னும் ஒரு பொருள் குறித்தன. |