பக்கம் எண் :

எச்சவியல் சூ. 215

இனி, கிள்ளை, மஞ்ஞை என்னுந் தொடக்கத்தன. 2ஒரு கூறு நிற்ப ஒருகூறு திரிந்தன; உந்தி, அடுக்கல் என்னுந் தொடக்கத்தன 3முழுவதூஉம் வேறுபடத்திரிந்தன. பிறவும் அன்ன.

சேனா

இ-ள் : ஒரு பொருள் குறித்துவரும் பல சொல்லும் பல பொருள் குறித்துவரும் ஒரு சொல்லும் என இருவகைப்படும் திரிசொல், எ-று.

வெற்பு, விலங்கல், விண்டு என்பன ஒருபொருள் குறித்த வேறு பெயர்க்கிளவி. எகினம் என்பது அன்னமும் கவரிமாவும் புளிமாவும் நாயும் உணர்த்தலானும்; உந்தியென்பது யாழ்ப் பத்தலுறுப்பும், கொப்பூழும், தேர்த்தட்டும், கான்யாறும் உணர்த்தலானும் இவை வேறுபொருள் குறித்த ஒருசொல்.

திரி சொல்லது திரிவாவது 1உறுப்புத் திரிதலும் முழுவதுந்திரிதலும் என இருவகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப்புத்திரிந்தன. விலங்கல், விண்டு என்பன 2முழுவதுந்திரிந்தன முழுவதுந்திரிந்தனவற்றைக் 2‘கட்டியவழக்கு’ என்பாரும் உளர். அவை கட்டிய சொல்லாமாயின் செய்யுள் வழக்காமாறில்லை; அதனான் அவையுந்திரி வெனல் வேண்டும் என்பது.


2. ஒரு கூறு நிற்ப ஒரு கூறு திரிதல் - ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளுள் ஒன்றோ பலவோ எழுத்துக்கள் அப்படியே இருக்க ஒன்றோ பலவோ எழுத்துக்கள் மாறுபடுதல்-கிளி என்பதில் கி நிற்க ளி திரிந்து கிள்ளை எனவந்தது. ஒன்று நிற்க ஒன்று திரிந்தது. பிறவும் அன்ன.

3. முழுவதும் திரிதலாவது சொல்லே வேறு சொல்லாதல். மலை என்னும் பொருளையுணர்த்தும் சொல்லாக அடுக்கல் என்பது வந்தது காண்க.

1. உறுப்புத்திரிதல்-ஒன்று அல்லது பல எழுத்துத்திரிதல்.

2. கட்டியவழக்கு-புதியதாக ஆக்கிக்கொண்ட (சொல்) வழக்கு.