யுணர்த்தின. தொகுதியாவன 2அகரமும், நில், கின்று, என்பனவும் உம்முமாம். அவை காலத்து இயலுதலாவது ‘கொல்யானை’ எனத் தொகுத்துக் ‘கொன்றயானை’ என விரித்தால் ‘செய்த’ என்னும் பெயரெச்ச வாய்பாட்டுத் தகரவீறு இறந்தகாலம் உணர்த்துதலும், ‘கொல்லாநின்ற யானை, கொல்கின்றயானை’ என விரித்தால் நின்ற, கின்ற என்னும் பெயரெச்சம் நிகழ்காலம் உணர்த்துதலும், கொல்லும்யானை எனவிரித்தால் செய்யும் என்னும் பெயரெச்சத்து உம் ஈறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்துதலுமாம். 1ஆயின், ‘உம்’ ஈறு எதிர்காலம் உணர்த்துதல்யாண்டுப் பெறுதும் எனின், ‘காலத்தியலும்’ என மூன்று காலத்திற்கும் பொதுவாகக் கூறிய அதனால் பெறுதும். இக்கருத்தானே பின்பு நூல் செய்தவர்கள் எல்லாரும் உம் ஈறு எதிர்காலமே உணர்த்தும் என்றார். சேனாவரையரும் இக்கருத்தானே, ‘அகன்றவர் திறத்தி 2னி நாடுங்கால்” (கலி. 16) என்பதே நிகழ்விற்கும் எதிர்விற்கும் காட்டினார்.
2. அகரம்-இறந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் உரிய பெயரெச்ச விகுதி. நில் என்றது ஆநின்று என்பதைக் குறிக்கும். நில் கின்று என்பன நிகழ்கால இடைநிலைகள். உம்-எதிர்காலப் பெயரெச்ச விகுதி. 1. உம் ஈறு நிகழ்காலத்துக் குரியது எதிர்காலத்துக்குரியதாவது எதனாற் பெறுதும்? என்பதுவினா, பெயரெச்சவிகுதிகளுள் அகரம் இறப்பு நிகழ்வுக் காலங்கட் குரியது உம் நிகழ்வுக் குரியது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லையாதலின் உம் விகுதியைக் கொள்ளவேண்டும். ஆசிரியர் இன்ன காலம் என்று கூறாது பொதுப்படக் ‘காலத்தியலும்’ என்றதனால் அமைத்துக் கொள்ளல் வேண்டும். 2. இனி நாடுங்கால் இப்பொழுது நாடுகின்ற காலத்து என நிகழ் காலத்துக்கும், இனிமேல் நாடும்காலத்து என எதிர் காலத்துக்கும் இதன் பொருள் விரிக்கப்படும். |