பக்கம் எண் :

வினைத் தொகை சூ. 19133

கொல்யானை என்பது, அக்காலத்து அஃது உதிரக் கோட்டோடு வந்ததேல் இறப்பும், அதன் தொழிலைக்கண்டு நின்றுழி நிகழ்வும், அது கொல்ல ஓடுதலைக் கண்டுழி எதிர்வும் விரியும்.

இனி, கொல்யானை என்பதன்கண் இரண்டுஈறும் ஒருங்கு தொக்கு நின்றது என்றற்கு விதி,

“செய்யும் செய்த என்னும் கிளவியின்
மெய்யொருங் கியலும் தொழில் தொகு மொழியும்”

(குற்றி. 77) என்றது ஆம். என்றதன் பொருள், செய்யும், செய்த என்னும் பெயரெச்சச் சொற்களினுடையகாலம் காட்டும் உம்மும் அகரமும் ஒரு சொற்கண்ணே சேர நடக்கும் புடை பெயர்ச்சி தொக்கு நிற்கும் சொற்கள் என்றவாறு. இங்ஙனம் இரண்டு பெயரெச்ச வாசகமூம் சேரத் தொக்கு நிற்றலான், ஆசிரியர் ஒரு சொல்லாக்கிப் புணர்க்கலாகாது என்று ‘புணரியல் நிலையிடையுணரத் தோன்றா (குற்றி. 77) என்றார். இவ்வெழுத்திகாரச் சூத்திரத்தானே பெயரெச்சம் நின்று தொக்கது என்னாது, ‘பெயரெச்சப் பொருளவாய் நின்று இரண்டு சொல் தொகும்’ என்று சேனாவரையர் கூறியது பொருந்தாமையுணர்க. அவை தொகுங்கால் தத்தமக்கு உரிய ஆறு பொருட்கண்ணும் தொகும்.

உ-ம் : ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல்யானை, செல்செலவு எனவும்,

1‘உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி       (குறுந். 145)

‘செய்பொருட் சிறப்பெண்ணி’       ( கலி-16)


1.உறைபதி-உறையும்பதி-நிகழ்காலம்
 செய்பொருள்-செய்யும்பொருள்-எதிர்காலம்
மடிபொழுது-மடிந்தகாலம்-இறந்தகாலம்
வென்வேல்-வெல்லும்வேல்-எதிர்காலம்
அரிதொழுவர்-அரியும்உழவர்-எதிர்காலம்
வெல்போர்-வெல்லும்போர்-எதிர்காலம்