பக்கம் எண் :

134தொல்காப்பியம்-உரைவளம்

‘வான்மடி பொழுதினி நீர்நசை இக்குளித்த’

‘வெல்வேல் அண்ணல் காணா வாங்கே’       (புறம். 141)

‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்       (புறம். 379)

‘வெல்போர்ச் சோழர்’       (ஐங்குறு. 56)

எனவும் வரும். இவற்றிற்குப் பொருட்கேற்ற காலங்கள் விரிக்க.

வெள்

இது வினைத் தொகையாமாறு கூறுகின்றது.

இ-ள் : வினைச்சொல் தொகுங்கால் காலந்தோன்றத்தொகும், எ-று.

‘காலத்தியலும்’ என்றது எக்காலும் கால முடையவாய் இயலும் என்றவாறு. காலம் எனப் பொதுவகை யாற் கூறியவதனால் மூன்று காலமும் கொள்ளப்படும். ‘தொகுதி காலத்தியலும்’ எனவே விரிந்த நின்றவழிப் போன்று தொக்க வழியும் தொகையாற்றலாற் காலந்தோன்றும் என்றவாறாம். ஈண்டு வினைச் சொற்கும் வினைப் பெயர்க்கும் முதல் நிலையாய், உண், தின், செல், கொல் என வினைமாத்திரம் உணர்த்தி நிற்பனவற்றை.

உ-ம் : ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், பொருகளிறு, செல் செலவு என வரும்.

காலம் உணர்த்தாது வினை மாத்திரம் உணர்த்தும் வினைப்பகுதியாகிய இப்பெயர்கள், நிலமுதலாகிய பெயரோடு தொக்குழிப் பெயரெச்சப் பொருளவாய் நின்று காலம் உணர்த்தும் என்பர் சேனாவரையர். செய்யும் செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்களுள் காலம் உணர்த்தும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியுமாகிய இடைச் சொற்கள் மறைந்து நிற்க வினைப்பகுதிகள் மட்டும் நில முதலாகிய அறுவகைப் பெயரோடு ஒட்டி நிற்கும் தொகைச்சொல் வினைத் தொகையாம் என்பது.

செய்யும் செய்த என்னுங் கிளவியின்
மெய்யொருங் கியலும் தொழில் தொகு மொழியும்’      (குற்றி. 77)

எனத் தொல்காப்பியர் கூறுவதால், பெயரெச்சம் நின்று தொக்கதே வினைத்தொகை என்பது ஆசிரியர் கருத்தாதல் இனிது புலனாம்.