பக்கம் எண் :

வினைத் தொகை சூ. 19135

ஆதி

வினைத் தொகை என்பது காலங் காட்டும் இடைநிலை மறைவது பற்றி வருவதாகும்.

ஆடு அரங்கு-ஆடிய-ஆடுகின்ற-ஆடும் என முக்காலமும் காட்டும் குறிப்பு மறைந்தது.

சுடுகாடு, ஊறுகாய், வளர்பிறை, கெடுமதி, குடிநீர் - இவற்றை விரித்துணர்க.

“வினையின் இடைநிலை விகுதிகள் வெளிப்படாத் தொடர்மொழி வினைத்தொகை எனச்சொலப் படுமே”

என்பது தெளிவான விளக்கமாகும்.

சுப்

பொருள் : வினைச் சொல் தொகுங்கால் காலந் தோன்றத்தொகும், எ-று.

‘வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல’, உவமத் தொகையே உவமவியல’ என்ற சூத்திரங்களில் ‘வேற்றுமைத்தொகையே’, உவமத் தொகையே’ என்ற சொற்கள் போல் இங்குக் ‘காலத்தொகையே’ என்று சொல்லாது ‘வினையின் தொகுதி’ என்று சொன்னதற்குக் காரணம் யாதெனின், காலவெழுத்தோடு பெயரெச்ச விகுதியும் தொகுதலால் என்க.

உரையாசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் இவர்கள்மதம் கொன்றயானை, கொல்லா நின்ற யானை, கொல்லும் யானை என்ற இவை ‘கொல்யானை’ என்று தொகும் என்பது.

சேனாவரையர் அவ்வாறு கூறாது ‘கொல்’ என்ற தாதுவும் யானையும் சேர்ந்து ‘கொல்யானை’ என்றாகிக் காலத்தையுணர்த்தும் என்றும், அவ்வினை விரிந்து நின்றவழித் தோன்றாது தொக்கவழித் தொகையாற்றலால் காலந்தோன்றும் என்றும் கூறுகின்றனர். இங்குத் தொக்க வழி என்பதற்குச் ‘சேர்ந்துவரும்வழி’ என்பது பொருளாம். இவ்வாறு கொள்வதற்குப் பிரமாணம் ‘செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின்