மெய்யொருங்கியலும் தொழில் தொகு மொழியும்-புணரியல் நிலையிடை யுணரத் தோன்றா’ (எழுத். 482) என்ற சூத்திரத்திலுள்ள ‘செய்யும்.... .... புணரியல் நிலையிடையுணரத் தோன்றா’ என்ற வாக்கியம் என்றும், அவ்வாக்கியத்தால் பெயரெச்சம் நின்று தொகுதல் ஆசிரியர்க்குக் கருத்தன்று என்றும் கூறுகின்றனர். அச்சூத்திரத்தால் வினைத் தொகையிற் பெயரெச்சமும் பெயரும் புணரும்போது உலகத்தில் வழங்குமாறு கொள்ளல் வேண்டுமேயன்றி புணரியல் விதிகளைக் கொள்ளக் கூடாது என்பது பெறப்படும் என்பதே உரையாசிரியர் கருத்து. அஃதே சிறந்தது எனத் தோன்றுகின்றது. அன்றியும் கொல் என்னும் தாது யானை என்ற பெயரோடு எவ்வாறு அந்நு வயிக்கும்? வடமொழியில் தேவார்த்தம், கும்பகார முதலிய சொற்களை நித்திய சமாசனாகக் கொண்டாற்போல இங்குக் கொல்யானை முதலியவற்றைச் சேனாவரையர் நித்யசமாசனாகக் கொண்டனர் போலும். அன்றியும் இச்சூத்திரத்தில் வினையென்பது தாதுவென்றும், அது தொழில் மாத்திரம் உணர்த்துகின்ற தென்றும், அப்போது அது தொழிற் பெயர் என்பது ஆசிரியர் கருத்து என்றும் அவர் கூறுவது பொருந்துமா? நட கொல் முதலிய தாதுக்களைப் பெயர் என்று கொள்ளுவதற்குச் சேனாவரையர் கூறும் காரணமாவது :- முதலிற்கூறும் சிவனயறிகிளவியும்........ இருபெயரொட்டும்’ (சொல். 114) என்ற சூத்திரத்தில் இருபெயரொட்டு அன்மொழித் தொகையே குறித்தலானும், அவ்வன் மொழித் தொகைக்குள் வினைத்தொகைப் புறதீதும் பிறந்த அன்மொழித் தொகையொன்றாதலானும் என்பதாம். வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையை ஆசிரியர் கூறாமையானும் இருபெயரொட்டு அன்மொழித் தொகையைக் குறிக்கவில்லை யென்ற தெய்வச்சிலையார் கொள்கை வலியுறுதலானும் சேனாவரையர் கூறியவாறு கொள்ளவேண்டா. சிவ வினைத்தொகை - காலமொடுவரும். வினை யெனப்படுவது காலமொடு தோன்றுவ தாகலின் வினைத் தொகையும் காலம் காட்ட வேண்டும். ‘உயர்மரம்’ என்பது உயர்ந்த மரம், உயர்கின்றமரம், உயரும் மரம் என முக்காலமும் காட்டும். அதனால் ஆசிரியர் தொல்காப்பியர் ‘வினையின் தொகுதி காலத்தியலும்’ என்றார். ‘உயர்மரம்’ |