என்பதற்கு மனதளவில் உயர்ந்தமரம் முதலியவாகக் காலம் நினைந்து பொருள் கொள்ள வேண்டுமே தவிர எழுதிக் காட்டும் படியான நிலையில் ‘உயர்ந்த மரம்’ முதலியவாகப் பொருள் காணக் கூடாது. ஏன்? முன்மொழி பெயர்ச்சொல் உயர்ந்த மரம் என்பதில் ‘உயர்ந்த’ என்பது பெயரெச்சமாக வந்த வினைச்சொல். இறந்த காலத்து ‘உயர்மரம்’ என்பதில் முன்மொழியாகிய ‘உயர்’ என்பது பெயர்ச்சொல். அஃதாவது உயர்ந்தது, உயர்ந்த, உயரும் முதலிய வினைச்சொற்கள் தோன்றுவதற்கு அடிப்படையான வேர்ச்சொல். வேர்ச்சொல் யாவும் பெயர்ச்சொற்களே. “தொழில் மாத்திரம் உணர்த்துவன எல்லாம் தொழிற் பெயர் என்பது ஆசிரியர் கருத்து” என்றார் சேனாவரையர். அதனால் உயர் என்பது பெயர்ச்சொல். பிற தொகைகளை நோக்கின் இது தெரியும். கற்கோயில் (வேற்றுமைத் தொகை), செந்தாமரை (பண்புத்தொகை), புலிக்கொற்றன் (உவமத்தொகை) கபில பரணர் (உம்மைத்தொகை) என்பனவற்றின் முன்மொழிகள் பெயராயினமை போல வினைத் தொகையின் முன்மொழியும் பெயரே. அதனால் சேனா வரையரும், இந்நூற்பாவில், ஆண்டு வினை யென்றது எவற்றையெனில் வினைச்சொற்கும் வினைப்பெயர்க்கும் முதல் நிலையாய் உண், தின், செல், கொல் என வினை மாத்திரம் உணர்த்தி நிற்பனவற்றை யென்பது” என எழுதினார். வினைத் தொகை - பெயர்க்காரணம் முன்மொழி பெயர்ச் சொல்லாயின் பெயர்த்தொகை என்னாமல் வினைத்தொகை என்பானேன்? அவ்வாறு கூறின் பிறதொகைகளும் பெயர்த்தொகை எனப்பட்டு வேறுபாடறிய இயலாதாம். அதனால் தனிப்பெயரே வேண்டும். மேலும், வினைத்தொகை காலமொடு வருவதாதலினானும், காலம் காட்டுவது வினையே யாதலினாலும், முன்மொழியானது வினையும் வினைப்பெயரும் தோன்றுதற்குரிய வேர்ச்சொல் ஆதலினாலும், வினைத்தன்மை அதில் இருப்பதினாலும் வினைத்தொகை எனப்பெயர் கொடுக்கப்பட்டது. வினைத் தொகை என்பதற்கு |