பக்கம் எண் :

140தொல்காப்பியம்-உரைவளம்

இது காறும் கூறியவற்றால் வினைத்தொகை என்பது இருசொற்றொடராயினும் பிரிக்கக் கூடாத ஒரு சொல் நிலையதே என்பதும், அது பெயரும் பெயரும் சேர்ந்த சொற்றொடரே என்பதும், அதனால் பெயரெச்சம் நின்று தொக்கது என்பது பொருந்தாது என்பதும், உரையாசிரியரும் சேனா வரையர்கருத்தினரே என்பதும் பெறப்படும்.

(இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் ஒன்பதாவது கருத்தரங்கு, ஆய்வுக் கோவை, தொகுதி 2 (1977) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா மலை நகர்).

பண்புத் தொகை

410. வண்ணத்தின் வடிவி னளவிற் 1சுவையினென்
 றன்ன பிறவு மதன் குண நுதலி
யின்ன திதுவென வரூஉ மியற்கை
யென்ன கிளவியும் பண்பின் றொகையே.       (20)

1சுவையின் அன்ன பிற-பாடம்-தெய்.

 (வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் என்று
அன்ன பிறவும் அதன்குணம் நுதலி
இன்னது இதுஎன வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே)

ஆ. மொ. இல.

Quality-compound is that which is made
of two words, the first-word denoting
colour, shape, extent, taste, etc. and
the second word being described by the
former in such a way as to indicate
its true nature

பி. இ. நூ.

வீர. 48

முன்மொழிப் பண்பும் இருமொழிப் பண்பும் ஒழிந்தமைந்த