பக்கம் எண் :

பண்புத் தொகை சூ. 20141

பின்மொழி யொப்பொடு முன்மொழி யொப்பும் பிணக்கொன்றிலா
முன்மொழி நற்கருத்தும் முன்மொழி நற்றுணிவுமென
நன்மொழியார் கன்மதாரய மாறென்ன நாட்டினரே,

நன். 365

பண்பை விளக்கும் மொழி தொக்கனவும்
ஒரு பொருட் கிருபெயர் வந்தவும் குணத்தொகை.

பிரயோ. 22

முன்மொழிப் பண்பு இருபண்பு விசேடியம் முன் மொழிதன்
முன்மொழித் துல்லியம் பின்மொழித் துல்லியம் மொய் குழலாய்
முன்மொழிச் சம்பாவனை அவதாரண முற்றுமிவை
நன்மொழிப் புண்புத் தொகைக் கன்மதாரய் நற்றமிழ்க்கே.

இ. வி. 359

வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையினென்று
அன்ன பிறவும் அதன்குணம் நுதலி
இன்னது இதுவென வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே.

இலக்கணக் கொத்து. 98, 99

பண்புத் தொகைவிதி பகரிற் பெருகும்
ஆயினும் சிலவிதி அறைகுவன் கேள் நீ
பண்பு முன் வருதலும் இருபண்பு அடுத்தலும்
இருபண்பொடு பொருள் இயைதலும் அவ்விரு
பண்புகள் தாமே பொருளை விளைத்தலும்
இயற்பெயர் சிறப்புப்பெயர் மாறுதலும்
சிறப்புப் பொதுப் பெயர் முறையே சிறத்தலும்
பொதுச்சிறப் புப்பெயர் முறையே பொருந்தலும்
பின்மொழி யாகு பெயராய்ப் பிறத்தலும்
முன்மொழி யாகு பெயராய் முடிதலும்