பக்கம் எண் :

142தொல்காப்பியம்-உரைவளம்

இருமொழி யாகு பெயராய் இருத்தலும்
ஒரு பொருட் கிருபெய ராகி யொட்டலும்
முற்பதம் தமிழ்மொழி முற்பதம் வடமொழி
இருபதம் தமிழ்மொழி இருபதம் வடமொழி
ஆகி வருதலும் ஆதியாப் பலவே.
சிலபெயர் எச்சமும் சில வினைத் தொகையும்
இருவகை யுவமையும் வண்ணச் சினைச் சொலும்
பண்புத் தொகையெனப் பகரும் வடநூல்.

முத்து. ஒ. 97

வண்ணம் சுவையே வடிவே அளவே
என்பவும் பிறவும் இதன்குணம் நுதலி
வரூஉம் இயற்கை பண்பின் தொகையே.

இளம்

உரை : பண்பு தொகுமிடத்து இந்நான்கும் பற்றித் தொகும் என்பது கருத்து.

வண்ணம் பற்றித் தொக்கது : கருங்குதிரை என்பது. இது விரியுங்காலை ‘கரியது குதிரை’ என விரியும். கரியதும் அதுவே குதிரையும் அதுவே கருமையுடைமையிற் குதிரை ‘கரியது’ எனப்பட்டது. இன்னது இது என நிற்றல் அதற்கு இலக்கணம், இன்னது என்பது கரியது என்றல். இது என்பது குதிரை என்றல்.

இனி வடிவுபற்றித் தொகுத்தல் : ‘வட்டப்பலகை’ என்பது, அது விரியுங்கால், ‘வட்டமாகியது பலகை’ என விரியும். ஆண்டும் இன்னது இது என்னும் குணம் நுதலிற்று, நிற்கும்.

இனி, அளவுபற்றித் தொக்கது : ‘குறுங்கோல்’ என்பது. அது விரியுங்கால் ‘குறியது கோல்’ என விரியும். ஆண்டும் இன்னது இது என நிற்கும்.

இனிச் சுவைபற்றித் தொக்கது : தீங்கரும்பு என்பது. அது விரியுங்கால் ‘தீவியது கரும்பு’ எனவிரியும். ஆண்டும் இன்னது இது என்னும் குணம் நுதலிற்று.

இனி, அன்ன பிறவும்’ என்றதனால் 1தண்ணீர், நறும்பூ, நன்னுதல், பருநூல், மெல்லிலை, நல்லாடை என எத்துணை


1. தண்ணியதுநீர், நறுவியது பூ, நல்லதுநுதல், பரியதுநூல், மெல்லியது இலை, நல்லது ஆடை என விரிக்க.