யுளமன் அப்பொருள் குணம்? அக்குணம் நுதலி இன்னது இது என வருமவை யெல்லாம் பண்புத் தொகையே யென்று கொள்க என்பதாம். இனி, ‘என்ன கிளவியும்’ என்றதனால், கேழற் பன்றி, வேழக் கரும்பு, சகரக் கிளவி, அகரமுதல், மாமரம் என இவையும் கொள்க. இவை ஒரு பொருட்கண் இரு பெயர் படவரும். இவற்றுக் கண்ணும் இன்னது இது என நிற்றல் ஒக்கும். கேழல் எனப்பட்டதுவும் 1அதுவே. பிறவும் அன்ன. மற்று, வேற்றுமைத் தொகையும் உவமத் தொகையும், வேற்றுமையுருபும், உவமவுருபும் தொக்கமையாற்றொகை யென்றல் அமையும்; ஒழிந்த வினைத் தொகையும், பண்புத் தொகையும் அவ்வாறு தொக்கு நின்றிலவால் எனின், அவ்வாறு தொகுதலே யன்று தொகையாவது. 2‘கொல்யானை’ என்புழிக் கொல்லும் என்னும் வினைச்சொல் ஒரு கூறு நிற்ப ஒரு கூறு தொக்கமையின் வினைத் தொகை யாயிற்று. ‘கருங் குதிரை’ என்புழிக் ‘கரியது’ என்னும் பண்புப் பெயர் ஒருகூறு நிற்ப ஒருகூறு தொக்கமையின் பண்புத் தொகையாயிற்று. சேனா இ-ள் : வண்ணம் வடிவு அளவு சுவை என்பனவும், அவை போல்வன பிறவுமாகிய குணத்தை நுதலிப் பின் தொக்க வழிக் குணச்சொற் குணமுடையதனை யுணர்த்தலான் இன்னது
1. அதுவே - பன்றியே 2 கொல்லும் என்பதில் கொல் என்னும் ஒரு கூறு நிற்ப உம் என்னும் ஒரு கூறு தொக்கது. கரியது என்பதில் கரு என ஒரு கூறு நிற்பது அது என்னும் சாரியையும் விகுதியுமாகிய கூறுகள் தொக்கன. 2. வரும் என்பதின் வருதல் தொழில் என்னகிளவியும் என்பதால் குறிக்கப்படும் (பண்பும் பண்பியும் ஒட்டிய) இரு பெயர்த் தொகையின் தொழில். நுதலி என்பதின் நுதலுதல் தொழில் அவ்விரு பெயர்த்தொகையின் முதற் பெயரைச் சார்ந்தது அதனால் இருபொருள் ஒருபெயர் சினையெனப்பட்டு அதன் தொழிலாயிற்று. அதனால் “நுதலி என்னும் ....... முடிந்தது” என்றார். |