அத்தொகையாதல் கொள்க. இவற்றது சாரை முதலாகிய நிலைமொழி பிரித்தவழியும் பொருளுணர்த்தலின், இவற்றைப் பிரித்துப் புணர்த்தார். அஃதேல், பாம்பைச் சாரை விசேடித்ததல்லது சாரையைப் பாம்பு விசேடித்தின்றாகலின் ஒன்றையொன்று பொதுமை நீக்காமையாற் சாரைப்பாம்-பென்பது முதலாயின பண்புத் தொகையாயினவாறென்னை-யெனின், நன்று சொன்னாய்; விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதும் ஆகிய இரண்டனுள் விசேடிப்பது விசேடியாக்கால் அது குற்றமாம். விசேடிக்கப்படுவது விசேடித்தின் றென்றலும் விசேடிக்கப்படுதலாகிய தன் தன்மைக் கிழக்கின்மையான் விசேடியாது நிற்பினும் அமையும் என்க. 4இவ்வேறுபாடு பெறுதற்கன்றே’ ‘இன்ன திதுவென வரூஉம்’ எனப் பின்மொழியை விசேடிப்பதாகவும், முன்மொழியை விசேடிக்கப்படுவதாகவும் ஆசிரியர் ஓதுவராயிற்றென்பது, அற்றேனும் சாரையெனவே குறித்த பொருள் விளக்கலிற் பாம்பென்பது மிகையாம் பிறவெனின், அற்றன்று. உலக வழக்காவது, சூத்திர யாப்புப்போல மிகைச் சொற்படாமைச் சொல்லப்படுவ தொன்றன்றி, 5மேற்றொட்டுக் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவதாகலின், அது கடாவன்றென்க. மிகைச் சொற்படாமைச் சொல்லப்படுமாயின், யான் வந்தேன், நீ வந்தாய் என்னாது, வந்தேன், வந்தாய் என்றே வழங்கல் வேண்டும் என்பது. இனி ஒற்றுமைநயத்தால் 6என்புந்தோலும் உரியவாதலாகிய உறுப்புஞ் சாரையெனப் படுதலின் அவற்றை நீக்கலாற் பாம்பென்பதூஉம் பொதுமை
4. “இவ்வேறுபாடு............... ஓதுவாராயிற்றென்பது” விளக்கம் சாரைப் பாம்பு என்பதில் இது என்பது பாம்பு. இன்னது என்பது சாரை, சாரை என்பது பாம்பை விசேடிப்பது. பாம்பு சாரை என்பதால் விசேடிக்கப்படுவது பாம்பானது சாரை என்பதை விசேடிக்கவில்லை. சாரை என்பது பாம்பு என்பதால் விசேடிக்கப்படவுமில்லை, இப்படி வரலாம் என்பதற்காக ஆசிரியர் ‘இன்னது இது, இது இன்னது’ என இருமுறைகூறாது ‘இன்னது இது’ யென ஒருமுறையே கூறினார். 5. மேல்தொட்டு-பண்டுதொட்டு. 6. எலும்புந்தோலுமாகக் காணப்படும் மனிதன் வயிற்றைச் சாரைக் குடல் என்பர். |