பக்கம் எண் :

148தொல்காப்பியம்-உரைவளம்

கரியது குதிரை, *வட்டப்பலகை, நெடியதுகோல், திவ்விது கரும்பு என்பன கருங்குதிரை, வட்டப்பலகை, நெடுங்கோல், தீங்கரும்பு எனத் தொகும்.

அன்னபிறவும் என்றதனான், தண்ணீர், வெந்நீர் என்பன முதலாயின கொள்க.

அஃதேல் இவை கரிய குதிரை நெடியகோல் எனப் பெயரெச்ச வாய்பாட்டானும் 1பண்புபற்றி வருஞ்சொல் வினைக்குறிப்பாகி முடிதலானும் வினைத்தொகையுள் அடங்கும் எனின் பண்புத்தொகை 2ஒருவாய்பாட்டான் விரிக்கப்படா தென்பது 3எழுத்ததிகாரத்துக் கூறுதலின் 4‘பெயரெச்சவாய்பாடும் வரும் வினைக் குறிப்பாதலானே யன்றே 5வினைத் தொகையோடு சேர ஓதுவாராயிற்று என உணர்க.

கருமையையுடைய குதிரையென வேற்றுமைத் தொகையாயும் அடங்குமால் எனின், ‘இன்னது இது’ என ஒற்றையொன்று விசேடித்து வருதல் வேண்டும், அவ்வாறு வருங்கால் வேற்றுமைத் தொகையாகா தென்க. வேற்றுமைத்தொகை, உவமைத் தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை என்பன தம்முள் 6ஒருபுடை ஒப்புமையுடையவாதலின் பாணினியார் தற்புருட சமரசம் என்று குறிப்பிட்டார்.


* வட்டமது பலகை என்றிருத்தல் வேண்டும்.

1. பண்புபற்றி வருஞ்சொல் ஆகிய என்பது. அது குறிப்புப் பெயரெச்சம். கொன்றயானை கொல்யானை என வருதல் போல் நெடியகோல் நெடுங்கோல் என வருதலின் வினைத்தொகையுள் அடங்கும்.

2. ஒருவாய் பாட்டான்-ஒரு முழுச் சொல்லால்.

3. குற்றியலுகரப் புணரியல் சூ.

4. பெயரெச்ச வாய்பாடு கரிய நெடிய முதலியனவும் ஆகிய என்பதும்.

5. பண்புத் தொகையை வினைத் தொகையோடு சேர வைத்தார்.