பக்கம் எண் :

பண்புத் தொகை சூ. 20149

இனி, ‘இன்னது இது என வரூஉம் இயற்கை என்ன கிளவியும்’ என்றதனான், பண்புபற்றி வருதலேயன்றிப் பெயரினால் ஒன்றையொன்று விசேடித்து வந்து ஒட்டுப்படினும் பண்புத்தொகையாம் என்று கொள்க. 8வாணிகச் சாத்தன், சாரைப்பாம்பு எனவரும். 9ஆயன்சாத்தன், ஆசிரியன் நல்லந்துவன் என எழுவாயும் பயனிலையுமாகி வருதலின்றி ஒட்டுப்படாத நிலைமையவாயினும் முதற்பெயர் விசேடணமாகிவரின் அதுவும் பண்புத் தொகையாம் என்று கொள்க.

நச்

இது பண்புத்தொகை கூறுகின்றது.

இ-ள் : இன்னது இது என-ஒரு பொருட்குப் பொதுமையுள்வழி இப்படி இருப்பது இப்பொருள் என்று அதனை விசேடித்துக் கூறும்படியாக, அதன் குணம் நுதலி-பின் வருகின்ற அப்பொருளின் குணத்தைத் தான் கருதி, வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் வரூஉம் இயற்கைக் கிளவியும்-அப்பொருட்குணமாகிய வண்ணத்தின் கண்ணும் வடிவின் கண்ணும் அளவின் கண்ணும் சுவையின் கண்ணும் வரும். இயல்பாகிய கிளவியும், அன்ன பிறவும் என்று வரூஉம் கிளவியும்-அவை போல் வன பிறவும் என்று சொல்லப்பட்டு வரும் கிளவியும், என்ன கிளவியும்-எத்தன்மைவாகிய சொற்களும், பண்பின் தொகை-பண்புச் சொல் தொக்க தொகையாம், எ-று.

பண்பு எனப் பண்புச் சொல் உணர்த்திற்று; ஆகு பெயராய். எழுத்ததிகாரத்து.

“உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்


6. ஒருபுடை ஒப்புமை - வேற்றுமைத் தொகையாகவும் விரிக்கப்படும் ஒற்றுமை.

7. தற்புருடசமாசம்

8. வாணிகச்சாத்தன் - வாணிகனாகியசாத்தன்.

9. ஆயன் சாத்தன்-ஆயனாகிய சாத்தன் எனின் பண்புத்தொகை; சாத்தன் என்பான் ஆயன் எனவோ ஆயனாவான் சாத்தன் எனவோவரின் எழுவாய்த்தொடராம்.