இனி, அளவு; 7‘குறுமுனி, குறுமகளாடிய ஊர்க்குறுமாக்கள், குறுந்தாட் கூதளிர். குறுங்கோட்டன’ என்பனவற்றையும் அவ்வாறே விரிக்க, இனி, நெடுமை முதலியவற்றிற்கும் இவ்வாறே ஒட்டுக. இனிச்சுவை : ஐம்பொறியான் நுகர்தற்கு உரிய இனிமைகளை உணர்த்தும் ‘சாயல் மார்பிற் கமழ்தார்’ குழைத்து எனவும், ‘தீங்கரும் பனுக்கிய’ எனவும், ‘தீம்புகை கமழவூட்டி’ எனவும், ‘உடைதிரை திவலை அரும்புந்தீநீர் எனவும், ‘தீந்தொடை நரம்பின்’ எனவும் மெய்யானும் நாவானும் மூக்கானும் கண்ணானும் செவியானும் நுகரும் இனிமையை யுணர்த்தின. இவற்றை விரிப்புழி அஃறிணை யிருபாற்கும் ஏற்ப இனிதாகிய மார்பு, தீவியனவாகிய கரும்புகள், தீவிதாகிய புகை, தீவிதாகிய நீர், தீவியனவாகிய நரம்புகள் என விரிக்க. இனி, ‘கட்கு இன்புதல்வன், கட்கு இன்புதல்வி, கட்கு இன்புதல்வர்’ எனக் கண்ணால் நுகரும் இனிமைக்கண் உயர்திணை முப்பாற்கும் ஏற்ப இனியனாகிய புதல்வன், இனியனாகிய புதல்வி, இனியராகிய புதல்வர் என விரிக்க. இனி வடிவு : இது வட்டம், சதுரம், கோணம் முதலியனவாம். வட்டப்பலகை என்பது வட்டமாகிய பலகை என விரிந்து தனக்கு ஏற்ற ஒருமை பன்மையை உணர்த்தும் ஈறுகள் இன்றி நிற்றலின், இஃது ஐம்பால் அறியாத பண்புத்தொகையாயிற்று. இங்ஙனம் ஐம்பால் அறியாத பண்புத்தொகையை ஆசிரியர் 8எழுத்தின்கண் நிலைமொழி வருமொழி செய்து புணர்த்தார். அவை ‘அகங்கை’ முதலியனவாம். கரும்பார்ப்பான் என்புழிக் கருமையும் பார்ப்பானும் தம்மின் வேறு இன்றி நின்று மகனாகிய பொருளையே உணர்த்திய
7. குறியனாகியமுனி, குறியளாகியமகள் குறியராகிய மாக்கள், குறியதாகிய தாள், குறியனவாகிய கோட்டன. 8. எழுத்ததிகாரத்தில், அகங்கை-அகமாகிய கை, இது அங்கை எனவரும் என்றார் ஆசிரியர். (புள்ளிமயங்கியல் 20) |