வாறும், 9‘கருமை’ பார்ப்பான் பொதுமையை விசேடித்த வாறும், ‘பார்ப்பான்’ கருமையின் பொதுமையை விசேடித்தவாறும் காண்க. 10இவை தொகுங்கால் கரு என்னும் பண்பு மாத்திரம் நின்று பண்புப் பெயராங்கால் பெற்று நிற்கும் ‘கருமை’ என்னும் மகர ஐகாரம் தொக்கு நிற்கும் என்றால், ‘கரியது வெளியது, கரியன, வெளியன’ என்னும் பண்பு உணர்த்தும் ஈறுகளின் கண்ணும் அவை தொக்கு இவையும் தொகைச் சொல்லாவான் சேறலின், அது பொருந்தாது; கரியன், கரியள், கரியர், கரியது, கரியன என்னும் பண்பு உணர்த்தும் ஈறுகளே தொக்கு நிற்பன என்று உணர்க, என்னை ? ஆசிரியர், ‘இப்படி இருப்பது இப்பொருள்’ என்று வினைக்குறிப்பிற்கு ஏற்ற விரிவு தோன்றச் சூத்திரஞ் செய்தாராகலின். ‘இன்னது இது’ என ஒரு பொருள் மேல் நிற்றலின் இப்பண்புத் தொகைகள் எல்லாம் பெயரெச்ச வினைக் குறிப்பாய் நிற்பதோர் பெயர் என்று உணர்க, அஃது உருபு ஏற்றும் பயனிலை கொண்டு நிற்றலின்.
9. கரும்பார்ப்பான், கரிய செய்ய வேளிய பார்ப்பனர் பலருள் செய்ய வெளியபார்ப்பனரை நீக்கிக் காரியபார்ப்பானையே குறித்தலின் பார்ப்பான் என்பதன் பொதுமை நீக்கி விசேடித்தது கரு என்பது. கருமை நிறமுடைய அந்தணர் அரசர் முதலியோரை நீக்கித் தன்னையே குறித்தது பார்ப்பான் என்பது, அதனால் பார்ப்பான் என்பது யாவர்க்கும் பொதுமையின் நின்ற கரு என்பதைத் தனக்குரியதாக விசேடித்தது. 10. “இவை தொகுங்கால்....... உணர்க”. விளக்கம். கரியானாகிய பார்ப்பான் என்பதே கரும்பார்ப்பான் எனத்தொகும். கருமை + பார்ப்பான் என்பது மை விகுதி கெட்டுக் கரும்பார்ப்பான் என நின்றது என்னலாமோ எனின் பொருந்தாது. கரியன் என்பதையும் கருமை + அன் எனப்பிரிக்கலாம்; அப்படியாயின் மகர ஐகாரம் (மை) தொக்கமையின் கரியன் என்பதும் பண்புத்தொகை எனப்படும். கரியது (கருமை + அ + து) வெளியது (வேண்மை + அ + து) என்பனவும் பண்புத்தொகை ஆதலின் மகர ஐகாரம் தொகுவது என்பது பொருந்தாது. பண்புணர்த்தும் ஈறு தொகுவதே பண்புத் தொகை என உணர்க. |