என்றாற் போலப் 13பண்பு உணர்த்தும் ஈறுகள் தொகாது தம்பொருள் உணர்த்தும் பெயர்ப் பெயர் இரண்டுகூடி நின்று விசேடித்தலை யுணர்த்தும் இருபெய ரொட்டுப்பண்புத் தொகையும் கொள்க. அவை ‘சாரை’ யெனவும் ‘கேழல் உழுத கரிப்புனக் கொல்லை’ எனவும் (ஐந்திணைஎழு. 11), வேழம் தீவியது எனவும், ‘இடைச் சொல் எல்லாம்’ (எச்ச.69)எனவும், ‘உரிச்சொல் மருங்கினும்’ (எச்ச. 60) எனவும் பின்வரும் சொல் இன்றியும் தம்பொருள் உணர்த்துதல் பற்றி எடுத்தோத்தினுள் முடியாமையின், இலேசால் கொண்டார். வட்டப்பலகை, அகங்கை முதலியன பின்வரும் சொல்லோடு அன்றித் தம் பொருள் உணர்த்தாமையின், நிறுத்தச்சொல்லும் குறித்து வருகிளவியுமாய் நிற்கும் என்று அவற்றை முடித்தார். இவற்றிற்குப் பின்வருஞ் சொல் முன்வரு மொழியை விசேடியாது நிற்கும். இங்ஙனம் வரும் என்றற்கு அன்றே ஆசிரியர் ‘இன்னது இது’ என்று முன்மொழியை விசேடிப்பதாகவும் பின் மொழியை விசேடிக்கப்படுவதாகவும் கூறுவாராயிற்று என்று உணர்க. வெள் இது பண்புத்தொகையாமாறு கூறுகின்றது. இ-ள் : வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவற்றினும் அத்தன்மைய பிறவற்றினும் ஆக, ஒரு பொருளினது குணத்தைக் கருதி ‘இத்தன்மையது இப்பொருள் என ஒன்றையொன்று விசேடித்து வரும் இயல்பினையுடைய எவ்வகைத்தொடர் மொழியும் பண்புத் தொகையாம், எ-று. உ-ம் : | கருங்குதிரை என்பது வண்ணப்பண்பு | | வட்டப்பலகை என்பது வடிவப் பண்பு நெடுங்கோல் என்பது அளவு தீங்கரும்பு என்பது சுவை |
இவை விரியுங்கால், கரியதாகியது குதிரை. வட்டமாகியது பலகை, நெடியதுகோல், தீவியது கரும்பு என விரியும். இத்
13. பண்புணர்த்தும் ஈறுகள் ஈன்மையின் தொகாது. |