பக்கம் எண் :

பண்புத் தொகை சூ. 20155

தொகை மொழிக்கண் உள்ள இரு சொல்லும் ஒரு பொருளவாய் ‘இன்னதுஇது’ என ஒன்றையொன்று பொதுமை நீக்கியவாறு காண்க.

.............................................

‘இன்னது இது’ என வரூஉம் இயற்கை என்ன கிளவியும் ‘பண்பின் தொகையே’ என ஆசிரியர் குறித்தமையால் பண்பு தொகாது இன்னது இது எனப்பட்ட வேழக்கரும்பு, கேழற்பன்றி, சாரைப்பாம்பு எனப் பெயர்தொக்கனவும் பண்புத் தொகையாதல் கொள்ளப்படும்.

ஆதி

இ-ள் : வண்ணம் வடிவு அளவு சுவையும், அவை போன்றவையும் அவற்றின் பண்பை விளக்கி இது இத்தன்மைத்து என அறிவிக்கும் எல்லாத் தொடர்மொழியும் பண்புத் தொகையாம்.

வண்ணம்-கருங்குதிரை : கரியதாகிய என அறிவித்தது.
வடிவு-வட்டக்கல் : வட்டமாகிய என அறிவித்தது
அளவு-குறுங்கட்டில் : குறுகியதாகிய என அறிவித்தது
சுவை-இன்சொல் : இனிமையாகிய என அறிவித்தது.

பண்பின் ஈறு வெளிப்படு கில்லாத் தொகைபற்றிப்பேசுகின்றமையின், தொக்கதால் தொகை என விதி சொல்வதே முறைமையாகும்.

பூவராகம்பிள்ளை

கிளவியாக்கம் ‘சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்’ (41) என்னும் சூத்திரத்தில் “திருவீரவாசிரியன் மாந்தக்கொங்கேனாதி என இயற்பெயர் முன் வந்தனவால் எனின், அவை தொகைச் சொல்லாகலான் அவற்றின் கண்ணதன்று இவ்வாராய்ச்சி யென்பது ஆண்டியற்பெயர் முன்னிற்றல் பண்புத் தொகையாராய்ச்சிக்கட் பெறுதும்” என்றார். (சேனாவரையர்) அவற்றை இங்கு எடுத்துக் கூறவில்லையாயினும், திருவீரவாசிரியன் மாந்தக் கொங்கேனாதி என்பன ஒரு பொருள்மேல் இருபெயர் ஒட்டி ஒரு சொல்லாக வந்தனவாதலின் சாரைப்பாம்பு வேழக்கரும்பு கேழற்பன்றி என்பனபோல அவைகளும் இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள் எனக் கொள்க.