பக்கம் எண் :

உம்மைத்தொகை சூ. 21165

உ-ம் : 1இரு பெயராவது பொருட்பெயரும் தொழிற் பெயரும். அவையாவன : கபிலன், பரணன்; ஆடல், பாடல்.

2பல பெயராவது பன்மை குறித்த பெயர். அவை பார்ப்பார் சான்றோர் என்பன. மேற்சொல்லப்பட்டன ஒருமை குறித்தலின் இதுவே றோதப்பட்டது.

அளவின் பெயராவது அளக்கப்பட்ட பொருளைக் குறியாது அளவு தன்னைக் குறித்து நிற்பது அவை, உழக்கு, நாழி, குறுணி பதக்கு, தூணி, கலம் என்பன. 3கூப்பிடு, காதம் என்பனவும் அதுவே.

எண்ணியற் பெயராவது எண்ணினாற் பொருள் குறித்து இயலும் பெயர். அவையாவன பதின்மர் ஐவர் என்பன.

நிறைப் பெயர்க்கிளவி என்பது நிறுக்கப்பட்ட பொருளைக் குறியாது நிறையின் பொருந்தி வருவது. அவை குன்றி, மஞ்சாடி, கால, அரை, கழஞ்சு என்பன.

எண்ணின் பெயராவது எண்ணப்பட்ட பொருளைக் குறியாது எண் தன்னைக் குறித்து நிற்பது. அவை ஒன்று, இரண்டு, பத்து, நூறு என்பன.

அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே உவமைத் தொகையே என்பது அறுவகைப்பட்ட பெயரையும் குறித்த நிலைமைத்து உம்மைத்தொகை என்றவாறு.


1. இருபெயர் என்பதற்கு மற்றையோர் தொடரில் வரும் இரண்டு பெயர் எனப்பொருள் கொண்டனர். இவர் பொருட்பெயர் தொழிற் பெயர் எனக்கொண்டார்.

2. பலபெயர் என்பதற்கு மற்றையோர் இரண்டுமேற்பட்ட பெயர் என்றனர்.

3. கூப்பிடு என்பது கூப்பிடுதூரத்தைக் குறிக்கும்.