பக்கம் எண் :

166தொல்காப்பியம்-உரைவளம்

4வரையறுத்து ஓதாமையால் இரண்டும் பலவும் வரப்பெறும் என்று கொள்க. கபிலனும் பரணனும் வந்தார் எனற்பாலது, கபிலபரணர் வந்தார் எனவரும். ஆடலும் பாடலும் தவிர்ந்தார் என்பது ஆடல் பாடல் தவிர்ந்தார் எனவரும். பார்ப்பாரும் சான்றாரும் வந்தார் எனற்பாலது பார்ப்பார் சான்றார் வந்தார் எனவரும்.. 5தூணியும் பதக்கும் குறையும் எனற்பாலது தூணிப்பதக்குக் குறையும் எனவரும். பதின்மரும் ஐவரும் போயினார் எனற்பாலது பதினைவர் போயினார் எனவரும். கழஞ்சும் அரையும் குறையும் எனற்பாலது கழஞ்சரை குறையும் எனவரும். பத்தும் இரண்டும் குறையும் எனற்பாலது பன்னிரண்டு குறையும் எனவரும்.

இனி, புலிவிற்கெண்டை, அந்தணரசர் வணிகர், தூணிப்பதக்கு முந்நாழி, நூற்றிருபத்தைவர், மாகாணியரைக்காணி, நூற்று முப்பத்து மூன்று எனவும் வரும். பிறவு மன்ன.

6ஏற்புழிக் கோடல் என்பதனால் எண்ணும்மையே ஈண்டுத்தொகுவது என்று கொள்க..

இடைச்சொல் ஓத்தினுள்ளும் உம்மை தொகும் என்றாரால் எனின், ஆண்டு விரிந்து நின்ற சொல்லின்கண் உம்மைதொகவும் பெறும் என்றார். ஈண்டு நிற்கும் சொல்லினது இலக்கணம் கூறினார் என்க.

நச்

இஃது உம்மைத்தொகை கூறுகின்றது.


4. இத்தனைச் சொற்பெயர்களில் எனவரையறுத்து ஓதாமையால்

5. மற்றையோர் இரண்டு பெயர்க்குமேல் அளவு உம்மைத்தொகை வாராது என்ன இவர் வரும் என்று கொண்டு தூணியும் பதக்கும் குறையும் என உதாரணம் காட்டினார்.

6. எண்ணுப் பொருளில் வரும் என்றா, எனா முதலிய இடைச்சொற்கள் தொகா என்பது கருத்து.