பக்கம் எண் :

உம்மைத்தொகை சூ. 21167

இ-ள் : உம்மைத்தொகை - உம்மை தொக்கு நிற்கும் தொகை, இருபெயர்-இரண்டாகிய பெயரும், பலபெயர்-பலவாகிய பெயரும், அளவின் பெயர்-அளத்தலால் உளதாகிய பெயரும், எண் இயல் பெயர்-எண் இயலான் ஆகிய உயர் திணைப்பெயரும், நிறைப்பெயர்கிளவி-நிறுத்தலான் ஆகிய பெயர்ச்சொல்லும், எண்ணின் பெயரொடு-எண்ணினான் உளதாகிய அஃறிணைப் பெயரோடே கூடப்பட்ட, அவ்வறு கிளவியும் கண்ணிய-நிலைத்து-அவ்வாறு சொல்லையும் கருதின நிலைமையையுடைத்து, எ-று.

உ-ம்:உவாகப்பதினான்கு
 புலிவிற்கெண்டை
தூணிப்பதக்கு
முப்பத்துமூவர்
தொடியரை
பதினைந்து

இவற்றை உம்மை விரித்துக் கொள்க.

பல பெயர் எனவே, இரு பெயரும் அடங்குமேனும், இரண்டாகிய பல பெயரினும் இரண்டு இறந்த பல பெயரினும் தொகும் என்றற்கு ‘இரு பெயர், பல பெயர்’ என்றார். அளவுப் பெயர் முதலியன இரு பெயர்க்கண் அடங்கும் எனினும், 1முன்னர் யாண்டும் பொருள் வேற்றுமையே பற்றி வேறாக ஓதுதலின், ஈண்டும் எடுத்து ஓதினார்.

வெள்

இஃது உம்மைத் தொகையாமாறு கூறுகின்றது.

இ-ள் : இருபெயர், பலபெயர், அளவுப் பெயர், எண்ணியற்பெயர், நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என அறுவகைப்பட்ட


1. எழுத்ததிகாரத்தில் அளவுப்பெயர் நிறைப்பெயர் எண்ணுப்பெயர் ஆகியவற்றுக்குத் தனித்தனியே புணர்ச்சியிலக்கணம் கூறியிருத்தலைக் கருதி இவ்வாறு எழுதினார்.