பக்கம் எண் :

168தொல்காப்பியம்-உரைவளம்

சொல்லையும் கருதி எண்ணும் நிலையினது (எண்ணிடைச்சொல்லாகிய உம்மை தொக்கு நின்ற) உம்மைத் தொகையாம், எ-று.

.................................................

வேற்றுமைத் தொகை முதலாயின பல சொல்லாற் றொகுதல் சிறுபான்மை; அதனால் உம்மைத்தொகை இருசொல்லானும் பல சொல்லானும் தொகும் என்பதற்கு ‘இருபெயர் பலபெயர்’ என்றார்.

ஆதி

உ-ம்இருபெயர்:உவாப்பதினான்கு-உவாவும் பதினான்கும்
என விரியும்.
 பலபெயர்:புலிவிற்கெண்டை-புலியும் வில்லும்
கெண்டையும் என விரியும்.
அளவின்பெயர்:தூணிப்பதக்கு-தூணியும் பதக்கும் என விரியும்
எண்ணியற் பெயர்:முப்பத்து மூவர்-முப்பதின்மரும் மூவரும்
என விரியும்.
நிறைபெயர்:தொடியரை-தொடியும் அரையும் என விரியும்.
தொடி என்பது பலம்என்னும் நிறையினைக்
குறித்த பெயர்.
எண்ணின் பெயர்:பதினொன்று-பத்தும் ஒன்றும் என விரியும்.

ஆதி

உ-ம் : கபில பரணர்
 சேர சோழ பாண்டியர்
நாழி ஆழாக்கு, ஒரு கோட்டை ஒரு மரக்கால்
அறுபத்து நான்கு கலைகள், ஈரேழு உலகத்தும்.
அரையரைக்கால், ஒரு கிலோ பத்துகிராம்.
பதினொன்று இருபத்தேழு.

உம்மை + ஐ : ஐ சாரியை. ஆகவே உம்மை-உம்.