‘உம்தொக்க தொடர்மொழி உம்மைத் தொகையே’ என்பது இலகுவான விளக்கம். கு. சுந்தர மூர்த்தி இருபெயர் என்பதற்குப் பொருட்பெயர் தொழிற்பெயர் எனக்கொண்டு அவற்றிற்கு முறையே கபிலபரணர், ஆடல் பாடல் என்பனவற்றை எடுத்துக் காட்டுவர். பல்பெயர் என்பதற்குப் பன்மை குறித்த பெயர் எனக்கொண்டு பார்ப்பார் சான்றோர் என்பதை எடுத்துக்காட்டுவர். ‘இருபெயர் பல்பெயர் என்பதற்குச் சேனாவரையரும் பிறரும் கூறுமாறு போல உரைவகுத்துக்கொண்டு ‘கற்சுனைக் குவளை யிதழ்’ என்பதை இருபெயராகவும், ‘புலிவிற் கெண்டை’ என்பதை மூன்று பெயராகவும், ‘வறையறைப்படுத்தி இடர்படுவதைக் காட்டிலும் தெய்வச்சிலையார் கூறும் உரை சிறப்புடையதாகத் தெரிகிறது. சிவ தெய்வச்சிலையார் இருபெயர் என்பதற்குப் பொருட்பெயரும் தொழிற்பெயரும் என்றார். கபிலன் பரணன், ஆடல் பாடல் என உதாரணமும் காட்டினார். திங்கள் செவ்வாய் விடுமுறை எனக் காலப்பெயரும் | காய் கனி வாங்கி வா எனச் சினைப் பெயரும் | மதுரை பழநி பார்த்து வந்தேன் என இடப்பெயரும் |
நல்லது கெட்டது தெரிந்தவன் எனக் குணப்பெயரும் இருபெயரும் வருவன உள ஆதலின் அவற்றை அவர் விட்டது ஏன்? எல்லாப் பெயருமே அவ்வறு வகையில் அடங்குதலின் தெய்வச்சிலையார் கூறியது பொருந்தாது. பல்பெயர் என்பதற்குப் பன்மைப்பெயர் என்றலும் வேண்டுவதன்று. ஒருமைப் பெயராயினும் பன்மைப் பெயராயினும் இருபெயராகவோ பல பெயராகவோ உம்மை தொக வரும் என்றலே நன்று. |