அஃதேல், உரிச்சொல்லோடி தனிடை வேறுபாடு என்னையெனின், உரிச்சொல் குறைச் சொல்லாகிவரும்; திரிச்சொல் முழுச் சொல்லாகிவரும் என்க. இதனை இயற் சொல்லைச் சார வைத்ததனால் செந்தமிழ் நாட்டுப் பட்டதேயந்தோறும் தாம் அறிகுறியிட்டாண்ட சொல்லென்று கொள்க. 1அவையாவன : மலை என்பதற்குக் குன்று, வரை எனவும்; குளம் என்பதற்குப் பூழி, பாழி எனவும்; வயல் என்பதற்குச் செய், செறு எனவும் வருவன. இவை ஒரு பொருள் குறித்தன. அரங்கம் என்பது யாற்றிடைக் குறையையும், ஆடும் இடத்தையும், இல்லின்கண் ஒரு பக்கத்தினையும் உணர்த்தும், துருத்தி என்பது யாற்றிடைக் குறையையும், தோற்கருவியையும் உணர்த்தும். ஆழி என்பது கடலையும். நேமியையும், வட்டத்தையும் உணர்த்தும். இவை வேறு வேறு பொருள் குறித்தன. இவ்வாறு திரிந்து வருதலிற் றிரிசொல்லாயிற்று. நச் இது திரிசொற்கு இலக்கணம் கூறுகின்றது. இ-ள் : திரிசொற்கிளவி- அவ்வியற்சொல் திரிந்த திரிசொல்லாகிய சொல்லை, ஒரு பொருள் குறித்த வேறு சொல்லாகியும்- வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் இருபாற்று என்ப- ஒருபொருளைக் குறித்துவரும் பல சொல்லாகியும் பல பொருளைக் குறித்துவரும் ஒரு சொல்லாகியும் இருவகைப்படும் என்று கூறுவர் ஆசிரியர், எ-று. அவ்வியற் சொல்லைத் திரிக்குங்கால் தம் எழுத்துச் சிறிது நிற்பத்திரிப்பனவும், அவ்வியற் சொல் தம்மையே பிறசொற் கொணர்ந்து முழுவதூஉம் திரிப்பனவும் என இருவகையவாம்.
1. பூழி நாட்டார் சிறுகுளத்தைப்பாழி யென்பர், நாட்டார் வயலைச் செறு என்பர். தெய்வச்சிலையார் செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலங்களையும் தமிழ் நிலமாகவே கொண்டமையால் பாழி, செறு முதலியவற்றைத் திசைச் சொல் எனக் கொள்ளாமல் செந்தமிழ்ச் சொல்லாகக் கொண்டு இவ்வாறு எழுதினார். |