பக்கம் எண் :

அன்மொழித் தொகை சூ. 22171

பிரயோ. 24.

இருமொழி பன்மொழி பின்மொழி எண்ணோடிரு மொழியெண்
தருமொழி யொற்றொழி திக்கந்தராளம் சகமுனிற்கும்
ஒருமொழி ஏனை விதிகாரலக்கணத்தோடு வரும்
பெருமொழி யாகி வெகுவிரி அன்மொழிப் பேரடைந்தே.

இ. வி. 341

வேற்றுமை முதலிய ஐந்தொகை மொழியினும்
ஈற்றுநின் நியலும் அன்மொழித் தொகையே

முத்து ஓ. 100.

ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் நிறுத்த முறையானே ஒழிந்துநின்ற அன்மொழித்தொகை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உரை : அக்கூறப்பட்ட மூன்று தொகைச் சொல்லிற்றுக்கண்ணே நின்று நடக்கும் அம்மொழித்தொகை, எ-று.

பண்புத்தொகைப் புறத்துப்பிறந்தது : வெள்ளாடை என்பது. 1அதனைப் படுத்தலோசையாற் சொல்ல வெண்மைமேலும் ஆடைமேலும் கிடவாது அவ்வாடையுடுத்தாள் மேல் கிடக்கும் என்பது;


1. வெள்ளாடை என்பது எடுத்தல் ஓசையாற் கூறப்படின் பண்புத்தொகை இதில் ஆடைவெளியது என்னும் பொருளளவில் நிற்கும். படுத்தல் ஓசையாற் கூறுதலாவது ‘வெள்ளாடை வந்தாள்’ என்பது. இதில் வெள்ளாடை எனும் சொல் ஆடையின் வெளியதைக் கருதாமல் வெளியது ஆடையை யுடுத்தவளைக் கருதுதலின் அவள் மொழிலே சிறப்பிக்கப்படும். அத்தொழில் வந்தாள் என்பது. அதனால் வெள்ளாடை என்பதைப் படுத்தல் ஓசையிலும் வந்தாள் என்பதை எடுத்தல் ஓசையிலும் கூறுதல் வேண்டும்.