அந்நிறைமொழி யோசையன்றிப் 2பிறிதோர் மொழியோசைப்பட்டுப் பொருள் கொள்ளுமாகலான், அம்மொழி அன்மொழியாயிற்று என்பது. அன்மொழித் தொகையாயக்காலும் வெளிய தாடை என்றே விரியும்; பிறிதில்லை. உம்மைத்தொகைப் பற்றிப் பிறந்தது : தகர ஞாழல் என்பது அது விரியுங்கால், தகரமும் ஞாழலும் என விரியும். அன்ன தன் தொகைக்கண் ஓசை வேறுபடச் சொல்லத் தகரத்தின் மேலும் ஞாழலின் மேலும் கிடவாது, அவையுடையாள் மேல் கிடக்கும். இனி வேற்றுமைத் தொகைபற்றிப் பிறந்தது : பொற்றாலி என்பது. அது விரியுங்கால் பொன்னானாயதாலி பொற்றாலி என்பதாம். பிறிதானும் விரியும்; பின்ன அத்தொகை பொன் மேலும் தாலி மேலும் கிடவாது. பொற்றாலி யுடையாள்மேல் நிற்கும், ஓசை வேறுபாட்டான் என்பது. இம்மூன்று தொகையும் பற்றிப் பிறத்தலின் ஓர் மிகுதிக் குறையில்லை, ஒக்கும் என்றவாறு. மற்று, தொகையதிகாரத்தின் முன்வைக்கப்பட்டதூஉம் சிறப்புடையதூஉம் வேற்றுமைத் தொகையாதலின், ஈண்டு இதனை முற்கூறாது பண்புத்தொகை முற்கூறியது என்னையெனின் அதனாற் பிறவும் உள கொள்ளப்படுவன : அவை யாவையோ வெனின், ஒழிந்து நின்ற உவமத்தொகையும் வினைத்தொகையும் பற்றிப் பிறக்கும் அன்மொழித்தொகை என்பது. உவமைத்தொகை பற்றிப் பிறந்தது. ‘அறற்கூந்தல் என்பது’ அது விரியுங்கால் அறல்போலும் கூந்தல் என விரியும். வினைத்தொகை பற்றிப் பிறந்தது : திரிதாடி என்பது. அது விரியுங்கால் திரிந்ததாடி என விரியும். அது தொக்குழித்திரிவின் மேலும் தாடியின் மேலும் கிடவாது திரிந்த தாடியுடையான் மேல் நிற்கும்.
2. பிறிதோர் மொழியோசை-அதேமொழியே வேற்று மொழியோசை போலப் படுத்தலோசைப்படுதல். |