இவை யிரண்டும் வழக்குப் பயிற்சி. 1அவைபோல அக்காலத்து இன்மையின் இலேசு பற்றி எடுத்துக் கொண்டார் என்பது. சேனா இ-ள் : பண்புச் சொல் தொகும் சொல்லினும் உம்மை தொக்க பெயர்க்கண்ணும் வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிச் சொற்கண் நின்று நடக்கும் அன்மொழித்தொகை, எ-று. 2பண்புத் தொகைபடவும் உம்மைத் தொகைபடவும் வேற்றுமைத் தொகைபடவும் அச்சொற் றொக்கபின் அத்தொகை அன்மொழித்தொகை யாகாமையின், தொகுவதன் முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய சொல்பற்றி வரும் என்பது விளக்கிய தொகைவயினானும் என்னாது ‘பண்பு தொக வரூஉம் கிளவியானும் உம்மை தொக்க பெயர் வயினானும் வேற்றுமை தொக்க பெயர் வயினானும் என்றார். இறுதிச் சொல் படுத்தலோசையாற் பொருள் விளக்குமாறு வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளூங் கண்டு கொள்க. உ-ம் : வெள்ளாடை, அகரவீறு என்பன, பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. தகர ஞாழல் என்பது உம்மைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. பொற்றொடி என்பது வேற்றுமைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
1. முன் கூறிய மூன்றுபோல, அக்காலத்து வழக்குப் பயிற்சி இன்மை பற்றி. 2. ஒரு தொகையிலிருந்து இன்னொரு தொகை பிறவாது. அதனால் ஒரு தொகையிலுள்ள சொற்களை நிலைக்களனாகக்கொண்டு அன்மொழித் தொகை பிறக்கும் என்பதற்காகக் கிளவியானும், பெயர் வயினானும் என்றார். இதனால் அன்மொழித்தொகை பற்றிக் கூறும் போது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை என்பது போல் கூறாமல், பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனக்கூறல் வேண்டும். இப்படியே பிறவும். |