இனி அவை வெள்ளாடையுடுத்தாள், அசுரமாகிய ஈற்றையுடைய சொல்எனவும், தகரமுஞாழலு மாகிய சாந்து பூசினாள் எனவும், பொற்றொடி தொட்டாள் எனவும் விரியும். பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறத்தல் பெரும்பான்மையாகலின் முறையிற் கூறாது அதனை முற்கூறினார்; வேற்றுமைத்தொகை நிலைக்களத்துப் 3பிறத்தலின் உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறத்தல் சிறுபர்னைமயாயினும் ஒருபயன் நோக்கி அதனை அதன் முன்வைத்தார். யாதோ பயன் எனின், சிறுபான்மை உவமைத்தொகை நிலைக்களத்தும் வினைத் தொகை நிலைக்களத்தும் அன்மொழித்தொகை பிறக்கும் என்பது உணர்த்துதல் என்க. அவை பவளவாய், திரிதாடி எனவரும். அவைதாம் பவளம்போலும் வாயையுடையாள், திரிந்ததாடியையுடையான் என விரியும். பிறவுமன்ன. தெய் அன்மொழித் தொகையாமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : பண்புதொக வரும் பெயர்க்கண்ணும், உம்மை தொக்க பெயர்க்கண்ணும். வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிக்கண் நின்றியலும் அன்மொழித்தொகை, எ-று. அல்லாத மொழி தொகுதலின் அன்மொழித் தொகையாயிற்று. இம்மூவகைத் தொகையினும் ஈற்று நின்றியலும் என்றதனான், முன்னும் பின்னும் நின்ற இரண்டு சொல்லானும் உணரப்படும் பொருண்மை யுடைத்து அன்மொழித்தொகை யென்று கொள்க. உ-ம் : | “ கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோ லதுவல்லது | | இல்லை நிலைக்குப் பொறை” (குறள் 570) |
என்றவழிக் கடுங்கோல் என்பது அஃதுடைய அரசர்க்குப் பெயராகி வருதலின் அன்மொழித் தொகையாயிற்று. கோலிற்கு அடையாகி நின்ற கடுமையும் அரசன்மேல் ஏறியவாறு கண்டுகொள்க. இது பண்பு பற்றி வந்தது.
3. பிறத்தலின்-பிறத்தலைக் காட்டிலும். |