பக்கம் எண் :

176தொல்காப்பியம்-உரைவளம்

நச்.

இஃது அன்மொழித்தொகை கூறுகின்றது.

இ-ள் : அன்மொழித்தொகை-ஒருவன் கூறும் சொற்கண் அன்றிப் பின்னர் வேறோர் சொல் தொக்கு நிற்கும் தொகை, பண்பு தொக வரூஉம் கிளவியானும்-பண்புச்சொல் தொகவரும் தொகைப் பெயர்க்கண்ணும், உம்மை தொக்க பெயர்வயினானும்-உம் என்னும் இடைச்சொல் தொக்க தொகைப்பெயர்க்கண்ணும், வேற்றுமை தொக்க பெயர்வயினானும்-வேற்றுமையுருபுகள் தொக்க தொகைப் பெயர்க்கண்ணும் ஈற்று நின்று இயலும்-இறுதிச் ‘சொற்கண்ணே நின்று நடக்கும் எ-று.

முன்னர் அன்மொழியான் உணரும் பொருள்களை மனத்தான் உணர்ந்து தான் பின்னர்ப் பண்புத்தொகை முதலியவற்றால் கூறக் கருதியவழி அத்தொகைகளின் இறுதிச்சொற்கண் எழுந்து, படுத்தல் ஓசையான் அத்தொகைச் சொல் தோன்றிப் பொருள் விளக்குதலின், ‘ஈற்று நின்று இயலும்’ என்றார்.

உ-ம். வெள்ளாடை, தகரஞாழல், பொற்றொடி எனவரும். இவை 1வெள்ளாடையுடுத்தாள் தகரஞாழல் அணிந்தாள். பொற்றொடி தொட்டாள் என இறுதிச் சொற்கண் எழுந்து, எழுந்து, படுத்தல் ஓசையால் தொகை தோன்றியவாறு காண்க.

பெரும்பான்மை வரும் பண்புத் தொகைப் பின்னர் அங்ஙனம் வரும் வேற்றுமைத் தொகையை வையாது, 2முந்து மொழிந்ததன் தலை தடு மாற்றான், உவமத்தொகைக் கண்ணும் வினைத்தொகைக் கண்ணும் அன்மொழித் தொகை வருதல் கொள்க.

வினையின் தொகையினும் உவமத் தொகையினும்
அன்மொழி தோன்றும் என்மனார் புலவர்

என்பது அபிநயம். அறற்கூந்தல், திரிதாடி என்பனவற்றை ‘அறல் போலும் கூந்தலையுடையாள்’ திரிந்த தாடியையுடையான் என விரிக்க.


1. யுடுத்தான் - பாடம்

2. முந்துமொழிந்ததன் தலை தடு மாற்றமாகக் கூறியதால்.