பக்கம் எண் :

அன்மொழித் தொகை சூ. 22179

1ஆய்வு : ஆசிரியர் ஏனோ வினைத் தொகை உவமத் தொகை இரண்டையும் அன்மொழித் தொகையிற் கூறினாரல்லர். அவையும் அன்மொழிதரும் தொடர்களே.

பவளவாய் அழகாக இருக்கிறாள்-உவமத்தொகை, பெண்

அன்மொழியைத் தருகிறது.

கெடுமதி ஏன் இப்போது வந்தான் வினைத் தொகை.

மனிதன் அன்மொழியைத் தருகிறது.

தொகைகள் ஐந்தும் அன்மொழி தருவதுபொல தொடர்களும் தந்து நிற்கின்றன. அதுபற்றி விளக்குவாம்.

பெரியமாடு-பெயரெச்சத்தொடர். 2அப்பெரியமாடு சும்மா நிற்கிறானே !

- அன்மொழி பெரிய மேளம் வரவில்லையே - அன்மொழி.

3தொட்டால் சுருங்கும்-வினையெச்சத்தொடர் தொட்டால் சுருங்கி (ஒரு செடி) அன்மொழி.

சிவ சிவா - அடுக்குத்தொடர்.
உறுவலி - உரிச்சொல் தொடர்.

4சிவ சிவா இன்று வந்தாரில்லையே-அன்மொழி சிவசிவா என்று கூறுகிறவர்.


1. தெய்வச்சிலையார் விளக்கம் கூறிவிட்டார்.

2. பெரிய மாடு - உவம ஆகுபெயர். பெரிய என்பதில்லாமல் மாடு சும்மா நிற்கிறான் என்றும் கூறப்படும்.

3. தொட்டால் சுருங்கி-காரணப்பெயர். சுருங்குதலுடையது சுருங்கியாயிற்று. சுருங்கு-இ. இகரம்காரணப்பொருளில் வந்தது. அல்லது சுருங்குவது சுருங்கி என வினைமுதற்பொருளில் வந்தது என்னலாம். அலரி என்பது போல.

4. சிவசிவா-இது காரணம் கருதியிட்ட பெயர். அல்லது ஆகுபெயராம். உறுவலி-இதுவும் ஆகுபெயரே.