உறுவலி வந்தான்-அன்மொழி 5திருப்புகழ் திருக்குறள் திருப்பாவை-இவை எல்லாம் தனிப்பொருள் தருகின்றன. உரிச்சொற்றொடரிற் பிறந்த அன்மொழித் தொகை என்பதே சிறப்பாகும். சிவ தொல்காப்பியர் உவமைத்தொகை, வினைத்தொகையடியாக வரும் அன்மொழித்தொகைகளைக் கூறாதது ஏன்? உரையாளருள் தெய்வச் சிலையாரையொழிந்தோர் ‘தொகைபற்றிய சூத்திரக்குக்கூறியவாறு முறையாகக்கூறாமல்’ பண்பு தொக வரூஉம் கிளவியை முற்கூறி முறை பிறழ வைத்தமையால் அவ்விரண்டு அன்மொழித் தொகைகளையும் கொள்ளல் வேண்டும் என்றனர். தெய்வச்சிலையார் கூறும் காரணம் சிறப்பானதாம். ஒரு தொகையில் வரும் இரு மொழிகளுமே அன்மொழிப் பொருளை யுணர்த்த வேண்டும். ‘கடுங்கோல்’ என்பது கடுங்கோல் மன்னனை யுணர்த்தும் போது, கோல் என்பது கோலுடைய மன்னனை உணர்த்துவதும், கடுங் என்பது அம்மன்னனது குணத்தைக்குறித்தலின் அவனையே உணர்த்துவதும் காணலாம். இவ்வாறு அமையாத தொகை அன்மொழிக்கு வாராது. ‘கருங்குழல் வந்தாள்’ என்பதில் குழல் என்பது குழலையுடையாளையுணர்த்தக் ‘கரும்’ என்பது குழலை மட்டுமேயுணர்த்தும், குழலுடையாளையுணர்த்தாது. ஆதலின் கருங்குழல் என்பது அன்மொழித்தொகையாகாது. இரு பெயரொட்டாகு பெயராகலாம். உவமைத்தொகையும், வினைத்தொகையும் அன்மொழிக்கு வாரா ஏன் எனின் அவற்றின் முன்மொழிகள் அன்மொழிப் பொருளைக் குறியானதுடியிடை எனின் இடைஎன்பது இடையுடையாளைக் குறிக்கத் துடி என்பது இடைக்கு அடையாகி வந்த அவ்வளவில் நிற்கிறது; இடையாளைக்குறிக்கவில்லை. தாழ்குழல் என்னும் வினைத்தொகையும் தாழ்குழல் வந்தாள் என்னும் போது குழல் என்பது குழலையுடையாளைக் குறிக்கத்தாழ் என்பது நிழலுக்கு அடையாம் அளவிநின்று விடுகிறது.
5. இவையும் ஆகுபெயரே. |