பக்கம் எண் :

182தொல்காப்பியம்-உரைவளம்

தொகைநிலைத் தொடரில்
பொருள் சிறக்குமிடம்

413. அவைதா
 முன்மொழி நிலையலும் பின் மொழி நிலையலு
மிருமொழி மேலு மொருங்குட னிலையலு
மம்மொழி நிலையா தயன்மொழி நிலையலு
மந்நான் கென்ப பொருணிலை மரபே.
  
 (அவைதாம்,
முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்
இருமொழி மேலும் ஒருங்குஉடன் நிலையலும்
அம்மொழி நிலையாது அயல்மொழி நிலையலும்
அந்நான்கு என்ப பொருள்நிலை மரபே).

ஆ. மொ. இல.

It is said that in compounds, the accent
denoting the sense, may fall on any one
of four words-upon the first words upon
the last word, upon both the words or
finally, upon some word not bound in the
Compound.

பி. இ. நூ.

வீர. 51.

அன்மொழி நற்றொகையிற் றொகும்போதும் அல்லாவிடத்தும்
நன்மொழிப் பின்பு நடுவுங்கெடு நன்கொரோ விடத்து
முன்மொழி யீறுகெடும் பன்மையாகும்; முரட் பொருள் கோள்
பின்மொழி முற்சொற் பிறிதோர் மொழியொடிரு மொழியே.