தொகைநிலைத் தொடரில் பொருள் சிறக்குமிடம் சூ. 23 | 183 |
நேமி. சொ. 63. முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும் அன்மொழியும் என்றிவற்றி லாம்பொருள்கள்-முன் மொழிதான் காலம் இடத்தாற் கருத்தோரும் சேர்த்தறிதல் மேலையோர் கண்ட விதி நன். 370. முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி எனுநான் கிடத்தும் கிறக்கும் தொகைப் பொருள். இ. வி. 342. ௸ ௸ ௸ முத்து. ஓ. 101. முன்மொழி பின்மொழி இருமொழி பிறமொழி நிலைபெறல் அத்தொகை மரபுநான் காகும். இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் அத்தொகைக் கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை : தொகுவன இருவகைமொழிகளான்; அவ்விருவகை மொழியும் இரு பொருளின்கண் தொக்கவிடத்து அவற்றைச் சொல்லுவான் அத்தொகைக்கண் முன்னதன் பொருள் உணர்தலுற்றுச் சொல்லுதல், பின்னதன் பொருள் உணர்தலுற்றுச்சொல்லுதல், இரண்டுடன் பொருளுணர்தலுற்றுச் சொல்லுதல், இரண்டின் மேலும் நில்லாது பிறிதோர் பொருள் உணர்தலுற்றுச் சொல்லுதல் என நால்வகை இலக்கணத்தாற் பொருளுணர நிற்கும், எ-று. 1அவற்றுள், முன்மொழிப் பொருள் உரை நின்றது வேங்கைப்பூ என்பது.
1. வேங்கையின் தளிர் கிளை முதலியவற்றை நீக்கிப் பூவைக் குறிப்பது நோக்கமாதலின் முன்மொழியில் பொருள் உரைநின்றது. பூ என்பது பல பூக்களுக்கும் பொதுவாதலின் வேங்கை என்பது சிறப்பாக அமையின் பின்மொழியில் பொருளுணர நின்றதாகும். |