பக்கம் எண் :

184தொல்காப்பியம்-உரைவளம்

முன்மொழி பின்மொழியாதல் இடமும் காலமும் என இருவகையாக உணரப்படும். அவற்றுள் இடத்தான் முன்மொழிப் பொருளாயிற்று. காலவகை நோக்கிப் பின்மொழிப் பொருளாம்.

வேங்கை என்பதும் பொருள் இல்லாததன்றுமன் : அப்பொருளுடன் அறியலுற்ற 2பூவினை அதனைச் சிறப்பிப்பான் வந்தது வேங்கை என்னுஞ் சொல் என்பது.

இருமொழிப் பொருள் உரை நின்றது ‘உவாப்பதினான்கு’ என்பது. பிறவும் உம்மைத் தொகையான் வருவனவெல்லாம் இருமொழிப் பொருள்பட நிற்கும் என உணர்க.

அம்மொழி நிலையாது அன்மொழிப் பொருள்பட நின்றன, 4முன் அன்மொழித்தொகை படக் காட்டினவெல்லாம் என்பது. அவை வெள்ளாடை என்னுந் தொடக்கத்தன.

மற்று இன்னுழிப் பொருள் நிற்கும் எனின், ஒழிந்துழியெல்லாம் பொருளில்லையா மாகாதே. ஆகவே, “எல்லாச் சொல்லும் பொருள் குறிததனவே (பெயரி.1) என்பதனோடு 5மலைக்கும் பிற எனின், மலையாது; என்னை? மற்றையுழிப் பொருள இல்லை என்பது அன்று; அவன் உணர்தலுறவு நோக்கி இது சொல்லினார் என்பது.

சேனா

இ-ள் : முன்மொழிமேல் நிற்றலும் பின்மொழிமேல் நிற்றலும் இருமொழிமேல் நிற்றலும் அவற்றின்மேல் நில்லாது பிற மொழிமேல் நிற்றலும் என அத்தொகையும் அவற்றது பொருள்நிலை மரபும் நான்கு என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று.


2. பூவினைச் சிறப்பிப்பதாவது பொதுத் தன்மையை நீக்குதல்.

3. அதனை என்பது தவறாக எழுதப்பட்டதாகலாம்.

4. முன் 22ம் ஆம் சூத்திரத்தில்

5. மலைக்கும்-மாறுபடும்