வெள்ளாடை என்புழித் தொக்க இருமொழிமேலும் நில்லாது உடுத்தாள் என்னும் அன்மொழிமேல் நின்றது. வேற்றுமைத்தொகை முதல் நான்கு தொகையும் முன் மொழிப்பொருள. வேற்றுமைத்தொகையும் பண்புத்தொகையும் சிறுபான்மை பின்மொழிப் பொருளவுமாம். உம்மைத்தொகை இருமொழிப் பொருட்டு. ஆறு எனப்பட்ட தொகை 1பொருள் வகையான் நான்காம் எனப் பிறிதோர் வகை குறித்தவாறு. தெய் மேற் சொல்லப்பட்ட தொகைக்கட் பொருள் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : மேற்சொல்லப்பட்ட தொகைச் சொற்கள்தாம் முன்மொழிக்கண் பொருள் நிற்றலும், பின்மொழிக்கண் பொருள் நிற்றலும், இருமொழி மேலும் பொருள் நிற்றலும், அத்தொகை மேற் பொருள் நில்லாது பிறமொழிக்கண் பொருள் நிற்றலும் என நால்வகைப்படும் என்ப பொருள் நிற்கும் மரபு, எ-று. அவைதாம் என எல்லாத்தொகையும் சுட்டுதலான், அவற்றுள் இவ்விலக்கணம் அவ்வத்தொகைக் கேற்றவழிக் கொள்ளப்படும். உ-ம் : ‘மாம்பழந்தின்றான்’ என்றவழித் தின்னப்பட்டது பழம் ஆதலின் அத்தொகைச்சொல் முன்மொழிக்கண் பொருள் நின்றது. ‘இடைமுலைக்கிடந்து நடுங்க லானீர்’ எனற்வழிக் கிடக்கப்பட்டது முலையிடை யாதலின் பின்மொழிக்கண் பொருள் நின்றது. ‘குதிரைத்தேரோடிற்று’ என்றவழி குதிரையோடத் தேரும் ஓடுதலின் இருமொழி மேலும் பொருள் நின்றது.
1. பொருள்வகை - பொருள்சிறக்கும் இடவகை. |