பக்கம் எண் :

தொகைநிலைத் தொடரில் பொருள் சிறக்குமிடம் சூ. 23 187

‘பொற்றொடி வந்தாள்’ என்றவழிப் பொற்றொடியை அணிந்தாள்மேல் பொருள் நின்றலின் அம்மொழியல்லாத மொழி மேற்பொருள் நின்றது.

இவை நான்கும் வேற்றுமைத்தொகை ஏனைத்தொகைக் கண்ணும் பொருள் நிற்குமாறு ஏற்பனவற்றுட் கண்டு கொள்க.

நச்

இது தொகைச் சொற்பொருள்நிலை கூறுகின்றது.

இ-ள் : அவைதாம் பொருள் நிலைமரபு-அத்தொகைச் சொற்கள்தாம் பொருள் பெற்று நிற்கும் நிலைமையினது முறைமையினை, முன்மொழி நிலையலும்-முன்மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்றலும், பின்மொழி நிலையலும்-பின் மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்றலும், இருமொழி போலும் ஒருங்கு உடன் நிலையிலும்-இருமொழிக்கண்ணும் பொருள் ஒருங்கு சிறந்து நிற்றலும், அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும்-அவ்விருமொழிக்கண்ணும் பொருள் சிறந்து நில்லாது மற்றோர் மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்றலும், அந்நான்கு என்ப-என்று சொல்லப்பட்ட அந்நான்கு கூறு என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று.

உ-ம் : வேங்கைப்பூ - முன்மொழி நிலையல்; அது ‘நறிது’ என்பதனோடு கூட்ட வேங்கைக்கண் பொருள் சிறவாது பூவின் கண் பொருள் சிறத்தலின்,

ஆரமாலை-பின்மொழி நிலையல்.
இவை வேற்றுமைத்தொகை
வேற்கண்-முன்மொழி நிலையல்

பெண்ணணங்கு என்பது அணங்கு போலும் பெண் என்பதாகலின் பின்மொழி நிலையலாம். இவை உவமத்தொகை.

கொல்யானை-முன்மொழி நிலையல், இவ்வினைத்
தொகைக்குப் பின்மொழி நிலையல் இன்று.
தீந்தேன்-முன்மொழி நிலையல்
அடைகடல்-பின்மொழி நிலையல். இது கடலாகிய