பக்கம் எண் :

188தொல்காப்பியம்-உரைவளம்

கரை எனக்கரை கூறுதலே கருத்தாகலின், இவை பண்புத்தொகை.

இவை இடம் பற்றி வந்த முன்னும் பின்னுமாம். காலம் பற்றி வருவனவும் வந்துழிக் காண்க.

பண்புத்தொகையே யன்றி ஏனைத் தொகைக்கும் விசேடித்தல் சிறுபான்மை வருதலின் ‘ஒன்றன் கண்ணது பொருட் சிறப்பு’ என்றார். உவாப்பதினான்கு இருமொழி மேலும் நின்றது.

‘உடன்’ என்றதனால் ‘புலிவிற் கெண்டை’ எனப் பன்மொழி மேல் நிற்றலும் கொள்க.

‘வெள்ளாடை’ என்பது இருமொழி மேலும் நில்லாது உடுத்தாள் மேல் பொருள் நின்றது.

வெள்

இது தொகைச் சொற்களிற் பொருள் நிற்கும் இடங்கள் இத்துணையவெனக் கூறுகின்றது.

இ-ள் : முன்மொழியில் நிற்றலும், பின்மொழியில் நிற்றலும், இருமொழியிலும் நிற்றலும், அவற்றின்மேல் நில்லாது புறமொழிமேல் நிற்றலும் எனத்தொகைச் சொற்களின் பொருள் நிற்கும் மரபு அந்நான்காம் என்று கூறுவர் ஆசிரியர், எ-று.

ஈண்டுப் பொருள் நிலை என்றது வினைகொண்டு முடியுமாற்றால் அச்சொல்லின் பொருள் மேற்பட்டுத் தோன்றுதலாகும்.

உ-ம் : வேங்கைப்பூ என்புழி முன்மொழிக்கண் பொருள் சிறந்து நின்றது. அதுநறிது என்னும் வினையோடு இயைபு மாற்றால் மேற்பட்டுத் தோன்றியவாறு காண்க. இஃது இட வகையான் முன் மொழியாயிற்று.

‘அடைகடல்’ என்புழி அடையென்னும் பின் மொழிக்கண்பொருள் நின்றது. கடலும் கடலடைந்த இடமும் கடல் எனப்படுதலின் அடைகடல் என்பது அடையாகிய கடல் என இருபெயர்ப் பண்புத்தொகை.