தொகைநிலைத் தொடரில் பொருள் சிறக்குமிடம் சூ. 23 | 189 |
‘உவாப்பதினான்கு’ என்புழி இருமொழிக் கண்ணும் பொருள் சிறந்து நின்றது. ‘வெள்ளாடை’ என்புழித் தொக்க இருமொழிமேலும் நில்லாது ‘உடுத்தாள்’ என்னும் அன்மொழிமேல் நின்றது. ஆதி தொடர்மொழியின் பொருள் சிறந்து விளக்கமுறுவது முன் மொழியிலும் பின்மொழியிலும் இருமொழிகளிலும் அவற்றில் இல்லாமல் அல்லாத மொழியிலும் ஆகும். உ-ம் : | மஞ்சள்தாலி- பொன்மகுடம் | முன்மொழியில் சிறப்பு நிலைக்கிறது. | | திண்டுக்கல் பூட்டு உறையூர் வேட்டி | பின் மொழியில் சிறப்பு நிலைக்கிறது. | | காஞ்சிபுரம் பட்டு கம்பர் காவியம் | இருமொழிகளிலும் சிறப்பு நிலைக்கிறது. | | முப்பால் நாலடியார் | இருமொழிகளிலும் இன்றி நூலில் சிறப்பு நிலைக்கிறது. | | விளாம்பழம் உப்புக்கடலை சந்தனக்கலவை மயில்வாகனக் காட்சி | இவற்றில் சிறப்பு நிலைக்கும் இடம் யாண்டு? |
தொகைச் சொற்கள் ஒரு சொல் தன்மையன 414 | எல்லாத் தொகையு மொருசொ னடைய (24) | | | | (எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய). |
ஆ. மொ. இல. All compounds function as one word |