பக்கம் எண் :

190தொல்காப்பியம்-உரைவளம்

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் 1ஒட்டுச் சொற்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

உரை : அறுவகைத் தொகைச் சொல்லும் 2எழுவாய் வேற்றுமை யியல்பாம் என்று ஈண்டு எய்துவித்தார், எ-று.

மற்று ஒட்டுச் சொற்களை ‘ஒருசொல் நடைய’ எனப்போந்த இலேசு என்னையெனின், அவைபல சொன்மைப்படப்பொருளிசையா; ஒரு சொல் விழுக்காடுபடத் திரண்டிசைக்கும் என்பது கருத்து.

3அஃதினை, யானைக்கோடு, வேங்கைப்பூ என்பனவற்றான் அறிக. 4கற்சுனைக் குவளையிதழ் என்பதும் அது.

சேனா

இ-ள் : அறுவகைத் தொகைச் சொல்லும் ஒரு சொல்லாய் நடத்தலையுடைய, எ-று.

‘ஒரு சொல் நடைய’ எனப் பொதுப்படக் கூறியவதனால் யானைக்கோடு, கொல்யானை என முன்மொழி பெயராயவழி ஒரு பெயர்ச்சொல் நடையவாதலும்; நிலங்கடந்தான், குன்றத்


1. ஒட்டுச்சொல்-தொகைச்சொல்

2. எழுவாய் வேற்றுமையியல்பாம் - எழுவாயாகி வினையொடு (பயனிலை யொடு) முடியும் இயல்பாம். ‘வேங்கைப்பூ நறிது’ என்பதில் வேங்கைப்பூ என்னும் ஒட்டுச்சொல் எழுவாய். இப்படியே பிறவும்.

3. அஃதினை-அதனை

4. ‘கற்சுனைக்கு வளையிதழ் நன்று’ எனின் ‘கற்சுனைக் குவளையிதழ்’ என்பது எழுவாய். அது நன்று எனும் வினைகொண்டது என்க.