பக்கம் எண் :

எச்சவியல் சூ. 319

திரியாதும் ஆதி நின்ற அகரம் ஐகாரமாயும் திரிந்தன என்றும், ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயல் உயிரும் கெட்டு ஆதி நீண்டது என்றும், ஈற்றுயிர் மெய்யும் இடையில் ஒற்றும் கெட்டு ஆதி நீண்டது என்றும் பின்னுள்ளோர் சந்தி முடிக்கின்றது பொருந்தாது என்னை? ‘பைங்கண்’ என்புழிப் ‘பசியதாகிய கண்’ எனப் பண்பு உணர்த்தும் ஈற்றை விரித்தல் அன்றிப் ‘பசுமைக்கண்’ எனத் தாம் தொகுத்த பண்புப் பெயரை விரித்தலாகாமையின், இவை செய்யுட்குப் புலவர் சிறிது நிற்பத் திரித்துக் கொண்ட பெயரெச்ச வினைக்குறிப்புப் பெயரென்று உணர்க. எழுத்ததிகாரத்துச் செய்யுட்குப் புலவர் சிறிது நிற்பத் திரித்துக் கொண்ட பெயரெச்ச வினைக்குறிப்புப் பெயரென்று உணர்க. எழுத்ததிகாரத்துச் செய்யுட்கு இவ்வாறு முடிக்க என ஆசிரியர் முடிபு கூறியவற்றை எல்லாம் ‘செய்யுள் முடிபு’ எனக் கூறலும், வழக்குச் சொல் இவ்வாறு திரிந்து வந்தனவற்றை ‘வினைத்திரி சொல்’ என்று பெயர் கூறலும் ஆசிரியர் கருத்தாம்.

இடையும் உரியும் திரிசொல்லாய் வருமேனும் உணர்க.

வெள்

இது திரிசொற்கு இலக்கணம் கூறுகின்றது.

இ-ள் : ஒரு பொருள் குறித்துவரும் பல சொல்லும் பல பொருள் குறித்துவரும் ஒரு சொல்லும் என இருவகையினையுடையது திரிசொல் என்பர் ஆசிரியர், எ-று.

உ-ம் வெற்பு, விலங்கல், விண்டு என்பன ‘மலை’ என்னும் ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல். ‘எகினம்’ என்பது, அன்னம், கவரிமா, புளி, நீர்நாய் என்னும் பல பொருள் குறித்த ஒரு பெயர்த் திரி சொல்.

படர்ந்தான் சென்றான் என்றற் றொடக்கத்தன ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல். துஞ்சினார், ஒதுங்கினார், மாண்டது என்றற் றொடக்கத்தன பல தொழில் குறித்த ஒரு வினைத் திரிசொல்.

தில், மன், மற்று, கொல் என்னுந் தொடக்கத்தன பல பொருள் கருதிய ஓரிடைத்திரி சொல்.

கடியென் கிளவி முதலாயின பல குணந்தழுவிய ஓர் உரித்திரி சொல்.