னாயிற்று, மக்களை யுயர்திணை யென்ப என்பனவற்றுள், கோடு கூரிது, பொன்னாயிற்று, உயர்திணை யென்ப என்னுந்தொகையல் தொடர்மொழி ஒருசொல் நடையவாய் 3எழுவாய்க்கும் இரண்டாவதற்கும் முடிவாயினவாறு கண்டுகொள்க பிறவுமன்ன. தெய் தொகைச் சொற்கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : அறுவகைத் தொகைச் சொல்லும் ஒரு சொல் நடைய, எ-று. என்பது என் சொல்லியவாறோ வெனின், இரண்டு சொல்லாகி ஒட்டுப்பட்டபெயர் பிரிந்து நில்லாது ஒரு பெயர் மாத்திரமாகி நிற்கும் என்றவாறு. உ-ம் : யானைக்கோடு கிடந்தது, துடியிடை நன்று. கொல்யானை யோடிற்று, கருங்குதிரை வந்தது. கழஞ்சரை குறைந்தது. பொற்றொடி வந்தாள் என எழுவாயும் பயனிலையுமாகியும் யானைக்கோட்டை, துடியிடையை, கொல்யானையை, கருங்குதிரையை, *உவாப்பதினான்கை, கழஞ்சரையை, பொற்றொடியை என உருபேற்றும் ஒரு சொன்னடையவாகி வந்தவாறு கண்டு கொள்க. நச் இது தொகைச் சொற்கள் எல்லாம் ஒரு சொல்லாய் நிற்கும் என்கின்றது.
3. யானை, இரும்பு என்பன எழுவாய். மக்களை என்பது இரண்டாவது. * உவாப்பதினான்கு என்பது எழுவாய்க்கு காட்டப்படாமையின் ஈண்டு இது தேவையில்லை. கரந்தைத் தமிழ்ச்சங்கப்பதிப்பில் (1924) உவாப்பதினான்கை என்பதற்குப்பதில்.......................எனப்புள்ளியிடப்பட்டுள்ளது. பாடபேதத்தில் அதுகுறிக்கப்பட்டுள்ளது. |