பக்கம் எண் :

194தொல்காப்பியம்-உரைவளம்

தொகைச் சொற்கள் ஒரு சொல் நடையவாய், அவை ‘கிளவி’ என்பதனோடு தொக்கு ஒரு சொல் நடையவாய் மேல் வந்து முடிப்பனவற்றோடு முடிந்தன. ‘கற்சுனைக்குவளையிதழ்’ என்றாற் போல்வனவும் அது. இனி,

‘கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்’       (சிலப்.7, 5)

1‘முட்புற முதிர்கனி’

‘பௌடமயில் உருவிற் பெருந்தகுபாடினி’       (பொரு ந. 47)

‘கன்னிப் பெண்ணா ரமுதின்’

எனச் செய்யுட்கண் பல தொகையும் விராய்வந்து, ஒரு சொல் நடையவாய்த் தம்மை முடிப்பனவற்றோடு முடிந்தன.

2‘துடியிடை நெடுங்கண் துணைமுலைப் பொற்றொடி’ இஃது அறுவகைத் தொகையும் ஒருங்கு தொக்கது. இனி, கலனே தூணிப்பதக்கு, தொடியே கஃசரை, பதினொன்றரை என அளவும் நிறையும் எண்ணும் ஒரு சொல் நடையவாய் நின்றன. இப்பன் மொழித் தொகைக்கு முற்கூறிய முடிபுகளும் கொள்க.

இனி, உம்மை எச்சவும்மையாதலின், தொகையல் தொடர் மொழிகளிலும் ஒரு சொல் நடையவாய் முடிவனவுளவெனக் கொள்க. அவை, யானைக்கோடு கூரிது, இரும்பு பொன்னாயிற்று, மன்றுபாடவிந்தது, மக்களை யுயர்திணை யென்ப எனவரும்.

வெள்

இது தொகைச்சொற் கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது.


1. முல்லைப்புறம்பே கொண்ட முதிர்கனி-பலாப்பழம்.

2. துடியிடை - உவமத்தொகை, நெடுங்கண் - பண்புத்தொகை, இடைகண்முலை - உம்மைத்தொகை; பொற்றொடி - வேற்றுமைத் தொகை, துணைமுலை (துணைத்த - இரண்டாக அமைந்த) வினைத்தொகை. பொற்றொடி - (பொற்றொடி யுடையாள் என) அன்மொழித்தொகை.