தொகைச் சொற்கள் ஒருசொல் தன்மையன சூ. 24 | 195 |
இ-ள் : அறுவகைத் தொகைச் சொல்லும் ஒரு மொழிபோல் நடப்பன, எ-று. ......................................... உ-ம் : யானைக் கோடு கிடந்தது, துடியிடை நன்று. கொல்யானை ஓடிற்று, கருங்குதிரை வந்தது. கழஞ்சரை நிறைந்தது. பொற்றொடி வந்தாள் என எழுவாயும் பயனிலையுமாகியும், யானைக் கோட்டை, துடியிடையை, கொல்யானையை கருங்குதிரையை, கழஞ்சரையை, பொற்றொடியை என உருபேற்றும் வேற்றுமை முதலிய அறுவகைத் தொகையும் ஒரு சொல் (யானையை, கருங்குதிரையை, கழஞ்சரையை, பொற்றொடியை என உருபேற்றும் வேற்றுமை முதலிய அறுவகைத் தொகையும்) ஒரு சொல் நடையவாகி வந்தவாறு காண்க. ஆதி எல்லாத் தொகை மொழிச் சொற்களும் ஒருசொல் போன்றே பயில்வன. மாம்பழம், கோழிக்குஞ்சு, செங்கல், தண்ணீர், காற்றாடி, தீப்பெட்டி, கோவில், நாற்காலி, மான்தோல், எண்ணெய், பற்பொடி, கலைமான், பிடரிமயிர், மயிர்மாட்டி, வயிற்றுவலி, இத்தகைய சொற்களை நாம் பிரித்துப் பொருள் உணர்வதில்லை. இடுகுறிப்பெயர்போல் பயின்று வருகின்றோம். அக்கருத்தை யுணர்த்தவே ஆசிரியர் ஒருசொல்நடைய என்றார். இவற்றைப்பிரித்துத் தொகை, தொடர் இலக்கணம் கூறுவது பிள்ளைமையாகும். சுப் சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் இம் மூவரது பொருளும் ஒன்றே. உரையாசிரியர் கூறிய பொருளைச் சேனாவரையர் ‘பெயரினாகிய தொகையுமாருளவே’ (சொல். 67) என்ற சூத்திரத்தின் உரையில் மறுத்துள்ளார். நிலங்கடந்தான் என்பதைச் சேனாவரையர் தொகையாகக் கொண்டதற்குக் காரணம் ‘பெயருந் தொழிலும் பிரிந்தொருங்கு இசைப்ப ..................தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும் |