பக்கம் எண் :

196தொல்காப்பியம்-உரைவளம்

(புணரியல் 3) என்ற சூத்திரத்தில் தொகுதி’ என்பதற்குச் ‘சமாசன்’ என்று பொருள் கொண்டதேயாம். தொகுதி என்ற சொல்லைச் சமாசன் என்ற பொருளைத்தவிர வேறு பொருள்களிலும் ஆசிரியர் வழங்கியிருத்தலானும் (சொல். 33 பார்க்க) பெயரும் வினையும் தொகும் என்பதை ஆசிரியர் சூத்திரத்திற்கூறாமையானும் ‘பெயரினாகிய தொகையுமாருளவே’ (சொல். 67) என்ற சூத்திரத்தில் உம்மைக்குப் பொருளாக அதனைச் சந்தருப்பத்திற்கு விரோதமாகச் சேனாவரையர் கொள்ள வேண்டி யிருத்தலானும், உரையாசிரியரும் தெய்வச் சிலையாரும் கொண்டவாறே கொள்ளுதல் நலம்.

இச்சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் சேனாவரையர் மதத்தைக் கைப்பற்றி, நிலங்கடந்தான் குன்றத்திருந்தான் என்வற்றைத் தொகையாகக் கொண்டனர். ‘பெயருந்தொழிலும்’ (எழுத். 133) என்ற சூத்திரத்தின் பொருளைக் கூறுமிடத்துப் பெயருந்தொழிலும் பிரிந்தி சைத்த வழியும் தொகையாதல் ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று என்றார். அந்நு வயத்தில் உரையாசிரியர் மதத்தையும், தொகுதி என்ற சொல்லின் பொருளில் சேனாவரையர் மதத்தையும் கைப்பற்றிப் ‘பிரிந்திசைத்தவழியும் தொகையாகும் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்?

உயர் திணையும்மைத்தொகை முடிபு

419. உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே
 *பலர் சொன்னடைத்தென மொழிமனார் புலவர்       (25)
  
 (உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே
பலர்சொல் நடைத்துஎன மொழிமனார் புலவர்)

ஆ. மொ. இல.

The scholars say that a compound with
‘Um’ will function as epieene plural


* பல சொல் நடைத்து-தெய்-பாடம்.