உயர்திணை யும்மைத் தொகை முடிபு சூ. 25 | 197 |
பி. இ. நூ. நன். 372 உயர்திணை யும்மைத் தொகைபலர் ஈறே. இ. வி. 343 உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர்சொல் நடைத்தென மொழிமனார் புலவர். முத்து ஒ. 104. உயர்திணை யும்மைத் தொகைபல் ஈறே. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், உம்மைத் தொகையுள் ஒரு சாரனவற்றுக்கண் படுவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. உரை : உயர்திணை மருங்கின் உம்மைச் சொல்லுக்கு இறுதி பலரைச் சொல்லும் சொன்னடைத்தாக என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. வ-று : 1கபில பரணர் எனவரும். இவ்வாறு அத்தொகைச்சொல் இறுதி பலர் சொன்னடைத்தன்றிக் கபிலன் பரணன் என னகரவீறாய் நிற்பின் அது. ‘வந்தான்’, ‘போயினான்’ என்றும் ஒருமை வினை ஏற்பின் அல்லது ‘வந்தார், போயினார்’ என்னும் பன்மை வினை ஏலா 2இனிப் ‘பலர்சொல் நடைத்து’ எனவே, அவ்விருவர் மேலும் வினையேற்கும்; அதனான் இது சொல்லினார் என்பது. மற்றுத் தொகைச் சொற்கள் தொகுவது தொக்கு நின்றக்கால் தம்மீறு கருதின பொருட்டு ஏற்கும் முடிவினை நின்
1. கபிலனும் பரணனும் என்பது பொருள். 2. இருவர் மேலும் வினையேற்பது : ‘கபிலபரணர் வந்தார்’ என்பது கபிலன் வந்தான் பரணன் வந்தான் எனத் தனித்தனிக் கூட்டியுணருமாறு நின்று வருதல் வினை இருவர் மேலும் நிற்பதாம். |