பக்கம் எண் :

198தொல்காப்பியம்-உரைவளம்

றாங்கே நின்று கொள்ளும்; 3இதுவாயின் இறுதி நின்றாங்கே நிற்பப் பொருட்கேற்ப முடிபு ஏலாமையான் இறுதி போதல் வேண்டிற்று என்பது.

சேனா

இ-ள் : உயர்திணைக்கண் வரும் உம்மைத் தொகை பலர்க்குரிய ஈற்றான் நடக்கும், எ-று.

4பொதுவிற் கூறினாரேனும் மாமூலம் பெருந்தலைச் சாத்தர், கபிலபரண நக்கீரர் எனவரும்.

விரவுப் பெயர்த் தொகையும் அடங்குவதற்கு ‘உயர் திணைப்பெயரும்மைத் தொகை’ என்னாது ‘உயர்திணை மருங்கின்


3. மற்றைத் தொகைச் சொற்கள் இருந்தபடியே இருந்து வினைமுடிபு கொள்ளும் உம்மைத் தொகை அப்படிக் கொள்ளின் தவறுபடும். கபிலன் பரணன் வந்தான் எனின் இருவர்க்கு ஒருமை முடிபு தவறு, ‘கபிலன் பரணன் வந்தார்’ எனின் கபிலன் எனும் ஒருமைக்கு வந்தார் எனும் பன்மையும் பரணன் என்னும் ஒருமைக்கு வந்தார் என்னும் பன்மையும் பொருந்தா. ஆதனால் கபிலன் என்பதன் னகரவிறு கெடுதலும் பரணன் என்பதன் னகரவீறு கெட்டு ரகாவீறுவருதலும் வேண்டும்.

4. பொதுவிற் கூறினாரேனும் என்பதற்கு உயர்திணை முப்பாற்கும் உரியவாறு கூறினாரேனும் எனக்கொண்டு ஆண்பாற்கே வரும் எனக் கொள்ள வேண்டும்- “எனக் கருத்துக் கூறுவர் கணேசய்யர் பெண்பாற்கு உதாரணம் இன்மையே காரணம்.

‘இருபெயர் உம்மைத் தொகை பல பெயர் உம்மைத்தொகை எனும் இரண்டையும் சேர்த்துப் பொதுவிற் கூறினாரேனும் எனக்கொண்டு மாமூல பெருந்தலைச் சாத்தர் என இருபெயர் உம்மைத் தொகையும் நக்கீர கபிலபரணர் எனப் பலபெயர் உம்மைத்தொகையும் கொள்ளல் வேண்டும்” என்பர் உரையாளர்.