பக்கம் எண் :

உயர்திணை யும்மைத் தொகை முடிபு சூ. 25199

உம்மைத்தொகை’ என்றார். அவை ஒட்டி ஒரு சொல்லாய் நிற்றலின் பலரறி சொல் எனப்படும். பலரறி சொல் கபிலபரணன் என ஒருமை யீற்றான் நடத்தல் வழுவாகலின் வழுக்காத்தவாறு

இதனானுந் தொகை ஒரு சொல்லாதல் பெற்றாம் 5ஒரு சொல் நீர்மை பெற்றின் றாயின் கபில பரணன் என ஒருமைச் சொல் ஒருமையீற்றான் நடத்தற்கட்படும் இழுக்கென்னை யென்பது.

தெய்

எய்தியது ஒரு மருங்கு மறுத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : உம்மைத் தொகையுள், உயர்திணைப் பொருள் மேல் வரும் உம்மைத்தொகை பல சொல் நடைத்தாகித் தொடரவும் பெறும், எ-று.

உ-ம் : கபிலபரணர் வந்தார்.

1அஃதேல், ஒட்டுப்பெயர் ‘ஒருசொல் நடைத்து’ என்றல் அமையாது; பலசொல் நடைத்தாகியும் சிலசொல் வருதலின் எனின், ஆண்டும் ஒருசொல் நடைத்து என்பதே கருத்து. ஒருவர்


5. ‘கபிலபரணன்’ என்பதில் கபிலன் என்பதன் னகர வீறுகெட்டது என்னல் வேண்டும். கபிலனும் பரணனும் என்பது பொருளாகும். அப்போது கபிலன் என்பதும் பரணன் என்பதும் ஒருமைகள்.

‘கபிலபரணர்’ என்பதில் ‘கபிலன்’ என்பதன் னகரவீறும் பரணன் என்பதன் னகரவீறும் கெட்டு இறுதியில் பலர்க்குரிய ரகரவீறு வந்து அவ்விருவர்க்கும் உரியதாக நிற்கிறது. எனவே இரண்டு சொற்களும் ஒட்டி ஒருசொல் நீர்மைப்பட்டன என்க.

1. “கபில பரணர்-ஒட்டுப்பெயர் இது ஒருசொல் நடைத்தாகி ‘வந்தனர்’ என ஒரு வினை கொள்ளும். கபில பரணர் நக்கீரர்-இது பல பெயர். இதுவும் பலசொல் நடைத்தாகாமல் ஒரு சொல் நடைத்தாகியே ‘வந்தனர்’ என ஒரு வினை கொள்ளும்” என்பது இப்பகுதியின் கருத்து.